search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.-அ.தி.மு.க.விற்கு இணையாக பலத்தை நிருபிக்க வேண்டும்-பா.ஜ.க. மாநில பொது செயலாளர் பேச்சு
    X

    தி.மு.க.-அ.தி.மு.க.விற்கு இணையாக பலத்தை நிருபிக்க வேண்டும்-பா.ஜ.க. மாநில பொது செயலாளர் பேச்சு

    • தி.மு.க.-அ.தி.மு.க.விற்கு இணையாக பலத்தை நிருபிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
    • 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக் கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் உழைப்பை காட்ட வேண்டும். மூன்று மாதம் கெடு. உழைப்பில் திருப்தி இல்லையெனில் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். பா.ஜ.க. கட்சியில் காங்கிரஸ் கட்சியை போன்று பொறுப்புகளை அள்ளி தெளிக்கமாட்டார்கள். நிர்வாகிகள் கட்சியையும் வளர்க்க வேண்டும், தங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கால் ரயிலில் இருக்க வேண்டும், ஒரு கால் ஜெயிலில் இருக்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுபயணம் செய்வதை ரயில் குறிக்கும், மக்கள் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை செல்ல தயாராக இருக்க ஜெயில் குறிக்கும். வருகிற 2024 நாடாளுமன்ற ேதர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகும் பட்சத்தில் 2026ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு இணையாக அல்லது கூடுதலாக பலத்தை நிரூபிக்க வேண்டும். வாக்கு சாவடி மையங்களில் பொறுப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை தக்க வைத்து கொள்ள உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணை பொது செயலாளர் புரட்சி கவிதாசன், அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்ட பொது செயலாளர்கள் கணேசன், குருஸ்ரீராம், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மாவட்ட பொருளாளார் தொழிலதிபர் முருகானந்தம், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×