என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர்.
    • சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து மகன் சரவணன் (வயது 10), தந்தையை இழந்த இவர் பள்ளிக்குச் செல்லாமல், படிப்பை நிறுத்தி உள்ளார். இது குறித்த தகவலறிந்த கலெக்டர் கற்பகம் உத்தரவின்பேரில் உதவி திட்ட அலுவலர் ஜெயசங்கர் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் கவுள்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷ்மான் அலி, உதவி ஆசிரியர் அகிலாதேவி ஆகியோருடன் குழுவாக கவுள்பாளையம் கிராமத் திற்கு சென்றனர். அங்கு பள்ளிக்கு செல்லாமல் இருந்த சரவணனை சந்தித்து அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர். இதே போல் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்த 5 மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அய்யலூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான சோலைமுத்துவின் மகன் பாரதி (14), தாயில்லாத குழந்தையான இவர் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு சென்றார். தகவறிந்த ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருடன் சென்று மாணவன் பாரதியை மீட்டு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    • பெரம்பலூரில் தி.மு.க. பைக் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்றனர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட மருதையான் கோவிலுக்கு  தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு பைக் பேரணி வந்தடைந்தது. அங்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு  அளித்தனர். அதன் பின்னர் பைக் பேரணியானது  பெரம்பலூர் மாவட்டத்தை வலம் வந்தது. 

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது.
    • இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது. இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    இதையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அன்னை காகன்னை ஈஸ்வர் ஆலயத்தில் 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபம் ஏற்றும் 5 அடி உயரத்திலான செம்பு கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் பூஜையை நடத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபம் அன்று 2,100 மீட்டர் திரி ,ஆயிரத்து 8 லிட்டர் எண்ணெய்,108 கிலோ கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). நேற்றிரவு இவர்கள் மோட்டார்சைக்கிளில் பண்ணக்காரன்பட்டி திருமண விழாவிற்கு சென்றனர்.

    கோவிந்தராஜ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கோவிந்தராஜ் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் முற்றோதலுக்காக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பெரம்பலூர் மையத்தின் சார்பாக திருமாந்துறையைச் சார்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில், அப்துல் கலாம் மாணவர் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்படும் 100 மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக முதுகலைத் தமிழாசிரியர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் தமிழ் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்ஆசிரியை புவனேஸ்வரி, பாண்டித்துரை, வேலாயுதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலானடேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டு போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயலாற்றினர். இப்போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் முதலிடம் பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன், துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர்.
    • அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது.

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு(வயது 40). இவரின் மனைவி ராதிகா(வயது 36). ராதிகாவின் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்காக, உறவினரான செல்வராஜ்(வயது 45) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரை நோக்கி சென்றுள்ளார். இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இருவரும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. மோதிய வேகத்தில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டு உள்ளார். ராதிகா இருசக்கர வாக னத்துடன் சாலையிலேயே விழுந்துள்ளார். அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது. இதில் ராதிகா தலை சுக்கு நூறாக உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் டிப்பர் லாரியை விரட்டி சென்றுள்ளனர். பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் அந்த டிப்பர் லாரியை கிராமத்து இளைஞர்கள் மடக்கி நிறுத்தி உள்ளனர். விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி டிரைவரை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் நன்றாக `கவனித்து' அதன் பின்னர் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் டிப்பர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உடையார் பாளையம் அருகே உள்ள வெட்டுவா வெட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(45) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

    குன்னம்

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி, உடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் விடுமுறைக்காக பொன்னமராவதி வந்துள்ளார். விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாடாலூர் காரைபிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாலையை கடக்க முற்பட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் இருசக்கர வாகனம் குமார் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை பாடாலூர் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்துரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 22). விவசாய தொழில் செய்து வந்த இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது செய்யாறுவில் இருந்து வந்த அய்யப்பபக்தர்கள் கார் ஒன்று இவர் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு உள்ளார். பாடா லூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.
    • தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை மேலாண் தலைவர் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழா வினை துவங்கி வைத்தார்.

    இதில் முதன்மை விருந்தி னராக சர்வதேச வணிக துணை பொது மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சர்வதேச வணிகத்தில் தொழில்மு னைவு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் இன்றியமை யான்மை குறித்து விரிவாக எடுத்து ரைத்தார்.

    தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது . இதில் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் நடுவராக பணியாற்றினார்.

    முன்னதாக கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மாரிய ம்மாள் நன்றி கூறினார் னார். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்திஷ்வரன், அலுவலக மேலாளர் ராஜா மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
    • பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்ப தாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதி பெற விண்ணப்பதாரர் ளிடமிருந்து விண்ணப் பங்கள் இணைய தளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படு கின்றன. இதற்கான எழுத்து தேர்வு 24-12 -2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்க ளும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் மேலாண்மை நிலையங்க ளில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல் வழி பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்க ளும், இப்பணிக்கு உரிய சான்று கட்டணம் செலுத்தி யதற்கான ரசீதினை, பெரம் பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்தில் பதி வேற்றம் செய்து விண்ணப் பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை. மேலும் இது தொடர்பான விரி வான விவரங்கள் பெரம்ப லூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை மற்றும் கால்நடை பராம்பரிப்புத்துறை இணைந்து டிஆர்டீ.182 அயிலூர் பால் உற்பததியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை சிகிச்சை முகாமில் சிறந்த கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் குணசேகரன் வழங்கினர். அருகில் பால்வளத்துறை கூட்டுறவு சர்பதிவாளர் விஜயா பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக fileim கண்காணிப்பாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விஸ்வநாதன், ஆவின் உதவி பொது மேலாளர் முனுசாமி, ஆவின் கால்நடை மருத்துவர் அன்பழகன், விரிவாக்க அலுவலர் இளங்கோவன், கால்நடை மருத்தவ குழு சிறுவாச்சூர், ஆவின் மருத்துவ குழு இணைந்து முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கச் செயலாட்சியர் பிரேம்குமார் செய்து இருந்தார்.

    ×