search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் வாக்காளர்களை இணைய வழியில் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
    X

    இளம் வாக்காளர்களை இணைய வழியில் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    • இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெரம்பலூர்

    வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காள ர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவி த்ததாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிட ப்பட்டுள்ள வரை வு வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி களில் மொத்தம் 2,94,314 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,43,585 ஆண் வாக்கா ளர்களும், 1,50,721 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகு தியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,68,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,32,906 ஆண் வாக்காளர்களும், 1,35,279 பெண் வாக்காள ர்களும், உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி,2024 ஜன 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வா க்காளர் பட்டியலில் சேர்த்தி டவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போ ன்றவற்றிற்கான விண்ண ப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்கு ச்சாவடி நிலை அலு வலர்களிடம் அளிக்கலாம்.

    17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது பெயரை வாக்கா ளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதிய வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள மாணவ மாணவி கள் அனைவருக்கும் படிவம் 6 வழங்கப்பட்டது. இணைய தளம் வாயிலாகவும் வாக்கா ளர் பதிவு நடைபெற்றது. இந்த படிவங்களை பிழையி ன்றி சிறப்பாக பூர்த்தி செய்த முதல் 10 மாணவ மாணவி களுக்கு தலா ரூ.500 வீதம் பரிசுத்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தி ய பாலகங்காதரன், ராமகி ருஷ்ணா கல்வி நிறுவ னங்களின் தலைவர் சிவ சுப்ரமணியன், செயலாளர் விவே கானந்தன், பெரம்ப லூர் தாசில்தார் சரவண ன், தேர்தல் பிரிவு வட்டாட்சி யர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×