திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா

வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது
திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா
Published on

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் முற்றோதலுக்காக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பெரம்பலூர் மையத்தின் சார்பாக திருமாந்துறையைச் சார்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில், அப்துல் கலாம் மாணவர் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்படும் 100 மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக முதுகலைத் தமிழாசிரியர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் தமிழ் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்ஆசிரியை புவனேஸ்வரி, பாண்டித்துரை, வேலாயுதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com