search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
    X

    பெரம்பலூரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

    62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன், துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×