என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
    • ராணுவத்தில் எழுத்து தேர்வில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 726 பேர் பங்கேற்றனர். 2-வது நாளான நேற்று 890 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 785 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவைகளில் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஓட்டத்தில் 270 பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 5-ந்தேதியுடன் இந்த பணிகள் நிறைவடைகிறது.

    • புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    • காதல் மனைவி சேர்ந்த வாழ வராததால் சம்பவம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). இவர் எளம்பலூர் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 1 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்ற பார்த்திபன் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு உள்ள ஆஸ்பெடாஸ் மேற்கூரை கம்பியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபனின் தந்தை லெனின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த 10-ந் தேதி காதல் திருமணம் நடந்துள்ளது. குடும்ப தகராறில் மனைவி சேர்ந்த வாழ வராததால் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்தது.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகாத ஏக்கத்தில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் முருகேசன் (வயது 24). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பிலிமிசை கிராமத்திற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில் முருகேசனின் பெற்றோர் இறந்ததால் அவர் தனிமையில் இருந்து வந்ததாகவும், திருமணமாகாத ஏக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    • வருகின்ற 12-ந் தேதி நடத்த முடிவு

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் நகராட்சி கிளையின் கூட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர விடுமுறை வழங்கிட வேண்டும். பண்டிகை நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்கக்கூடாது. மாதா மாதம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை பணியாளர் கணக்கில் செலுத்திட வேண்டும். தொடர்ந்து பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யும் முறையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நேரிடையாக மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலியை வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் வருகிற 12-ந்தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சாலை மறியல் போராட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    • வாகன விபத்தில் வியாபாரி பலியானார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது சம்பவம்

    பெரம்பலூர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகே நேற்று இரவு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ராமச்சந்திரன் (வயது 55) என்பவர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் காரும் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

    • மருத்துவமனைகளில் தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
    • கேக் வெட்டி கொண்டாடினர்

    பெரம்பலூர்

    மேற்கு வங்க மாநிலத்தின் 2-வது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் டாக்டர் பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றினார். பி.சி.ராய் பிறந்தது 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, மறைந்தது 1962-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஆகும். மருத்துவம், அரசியல் நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக டாக்டர் பி.சி.ராய் திகழ்ந்தார். அவரது சேவைகளை போற்றும் வகையில், அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர், டாக்டர்கள் தின வாழ்த்துக்களை கூறி, இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் டாக்டர்களுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளும் வாழ்த்துக்களை கூறினர்.

    • பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், மற்றும் கிராமிய பகுதிகளான வடக்கு மாதவி, எளம்பலூர், சிட்கோ, சமத்துவபுரம், இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, அருமடல், அருமடல் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு நடந்தது
    • 2 மையங்களில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 59 உதவி சிறை அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு கணினி வழியாக ஆன்லைன் கொள்குறி வகை போட்டி தோ்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத மொத்தம் 221 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத மையங்களாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியும், ரோவர் பொறியியல் கல்லூரியும் ஒதுக்கப்பட்டன. தேர்வாளர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வையும் எழுதினர்.

    • சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    பெரம்பலூர்

    சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சனி பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் சனி பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். ஆனி மாத 2-வது பிரதோஷமும் வருகிற 15-ந்தேதி சனிக்கிழமையில் தான் வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வண்ணாரப்பூண்டி பகுதியில் மது விற்கப்படுவதாக வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் வண்ணாரப்பூண்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து (வயது 60) என்பவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை அட்டைப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தார். அவரை மறித்து சோதனை செய்தபோது, அதில் 100 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தனர்.

    • குற்ற வழக்குகளில் 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2 குற்ற வழக்குகளின் விசாரணை பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நெய்குப்பை கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    ×