என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே லாரிகள்-மினி வேன் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். மினி வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரை அடுத்த மலையப்பநகர் பிரிவு பாதை அருகே கோயமுத்தூரில் இருந்து தனியார் டயர் தொழிற்சாலைக்கு ஒரு லாரி செல்ல யூ வளைவில் திரும்பி நின்றது.
அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற பார்சல் சேவை லாரியும், பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மினி வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது பார்சல் சேவை லாரியும், மினி வேனும் மோதிக் கொண்டன. இதனை அடுத்து யூ வளைவில் நின்ற கோவை லாரி மீது பார்சல் லாரியும் மினிவேனும் மோதின.
இந்த விபத்தில் மினிவேன் கவிழ்ந்து நொறுங்கியது. 2 லாரிகளின் முன்புறம் சேதம் அடைந்தது. இதில் வேன் டிரைவர் பெரம்பலூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 43), வேனில் உட்கார்ந்திருந்த சித்தளியை சேர்ந்த நாராயணசாமி மனைவி நல்லம்மாள் (56), தொண்டமாந்துறை அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி லதா (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ஜெயராமின் மனைவி உமா (32) காயமின்றி உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 3 பேரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி நல்லம்மாள், லதா இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து உமா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது.
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

படக்குழுவினருடன் ஷங்கர்
இந்நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினருடன் ஷங்கர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வேப்பந்தட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 58). இவர் நேற்று தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை பார்ப்பதற்காக வயலுக்கு சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராமம், வார்டு எதுவாக இருந்தாலும் ஊசி போட்டவர்கள் யார்-யார்? போடாதவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை கையில் வைத்திருப்பார்கள். ஊசி போடாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஊசி போடுவார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் நூறு சதவீதம் கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 50 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசியும் இந்த மாத இறுதிக்குள் போட்டு விட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதையடுத்து கிராமங்களுக்கே நடமாடும் வாகனங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை மதுராந்தகம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் பற்றி மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 5 கோடியே 78 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 4 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 841 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 1 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

அதாவது 71 சதவீதம் பேர் முதல் தவணையும், 31 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.
இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 70 சதவீதம் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகத்தான் நடமாடும் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி உள்ளோம். மொத்தம் 79 ஆயிரத்து 395 கிராமங்கள், 15 மாநகராட்சிகளிலும், 1,046 வார்டுகள், 121 நகராட் சிகளில் 8 ஆயிரத்து 288 வார்டுகள் மற்றும் 528 பேரூராட்சி பகுதிகள் உள்ளன.
நடமாடும் மருத்துவ குழுவினர் இந்த பகுதிகள் அனைத்துக்கும் செல்வார்கள். மொபைல் வாகனங்களில் டாக்டர், ஊசி போடுபவர், தரவுகளை பதிவு செய்பவர்கள் இருப்பார்கள்.
கிராமம், வார்டு எதுவாக இருந்தாலும் ஊசி போட்டவர்கள் யார்-யார்? போடாதவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை கையில் வைத்திருப்பார்கள். ஊசி போடாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஊசி போடுவார்கள்.
இந்த பணிகளில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.
கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தன்னையும் காத்து, நாட்டையும் காக்கும் வகையில் இந்த திட்டத்தை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 55,246 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 7-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 240 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 343 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர். முகாமை பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலத்தூர் ஒன்றியத்தில் நேற்று 3 ஆயிரத்து 373 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களை ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 6 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 7-வது கட்ட சிறப்பு முகாமில் 14 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 6 சிறப்பு முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 7-வது கட்ட சிறப்பு முகாமில் 41 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லையன் (வயது 65). இவர் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பாடாலூர் போலீசார் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அரணாரை கிராமத்தை சேர்ந்த குணசேகரன்(வயது 57), குரூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(61) ஆகியோர் காகிதத்தில் வரிசையாக எண்களை எழுதி வைத்திருந்ததை கண்டு, அவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமார், குணசேகரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 805.36 மி.மீ. மழை பெய்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியதால், அவை நிரம்பி வருகின்றன. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போதும், வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. பகல் நேரத்தில் வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 568 மி.மீ. ஆனால் பெய்த மழையளவு 805.36 மி.மீ. ஆகும். இதன்படி கூடுதலாக 237.36 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதி மாலா நகரை சேர்ந்தவர் சேட்டு. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகள் கமருன்னிஷா (வயது 31). இவர் குன்னம் அருகே உள்ள இலந்தகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்தார். கமருன்னிஷாவை பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் ஆனந்த் (33) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆனந்தின் காதலை கமருன்னிஷா ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது நண்பரான பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த அரவிந்த் என்ற அப்பாக்குடன் (22) சேர்ந்து கடந்த 14.8.2018 அன்று காலை அல்லிநகரத்தில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்ற கமருன்னிஷாவை தொண்டப்பாடியில் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அரவிந்த் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து ஆனந்த், அரவிந்த் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டு நீதிபதி கிரி தீர்ப்பளித்தார். இதில் ஆனந்த், அரவிந்துக்கு கமருன்னிஷாவை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் அவர்களுக்கு அபராதமாக தலா ரூ.57 ஆயிரத்து 500 விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் அவர்கள் மேலும் தலா ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இரட்டை ஆயுள் தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இதையடுத்து ஆனந்த், அரவிந்தை குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பஸ்சில் ஏறியபோது பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சந்திரா (வயது 47). இவர் நேற்று மாலை பெருமத்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் தூக்க காரியத்திற்கு செல்வதற்காக பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
அப்போது மர்மநபர் ஒருவர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சந்திரா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழைய பஸ் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட துணை அமைப்பாளர் ரேவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநில துணைத் தலைவர் வக்கீல் பாரதிஅண்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் பேசினார்கள்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணையின்படி சமவாய்ப்பு கொள்கையை வெளியிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமல்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஜூலை 7-ந்தேதி வெளியிட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் 2017-ம் ஆண்டு சட்டவிதிகளின் படி 3 மாதத்திற்குள் அமல்படுத்தி 20-க்கும் குறையாத பணியாளர்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்த்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் காது கேளாத, பார்வை இழந்த, பேசும் திறன் இழந்த, உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. அதன்படி வருகிற 29-ந்தேதி காலை 10 மணியளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் ஆசிரியர், டிரைவர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.