என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சார்பில் நிலம் பிரச்சனைகளை தீர்க்க விசாரணை முகாம் நடந்தது.
- முகாமில் 29 மனுக்கள் பெற்றப்பட்டு 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சார்பில் நிலம் பிரச்சனைகளை தீர்க்க விசாரணை முகாம் நடந்தது.
முகாமிற்கு தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். எஸ்ஐ அபுபக்கர் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு எஸ்ஐ குணாவதி, ஏட்டுக்கள் ராமராஜ், ரவிசாந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். முகாமில் 29 மனுக்கள் பெற்றப்பட்டு 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளது.
- கடல்வாழ் உயிரினம் அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
- இந்த பூமியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமோனைட்ஸ் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர்:
6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினம் அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் தலைக்காலி (நத்தை போன்ற தோற்றமுடையது) குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட,
அதன் தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக ''அமோனைட்ஸ் மையம்" பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அமோனைட்ஸ் மையத்தை பொதுமக்களுடன் பார்வையிட்டார்.
பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மையத்தில் அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொல்லுயிர் எச்சங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் தொல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் தொல்லுயிர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பூமியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமோனைட்ஸ் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150-க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள சில அரியவகை அமோனைட்ஸ்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆய்வறிஞர்களும், மாணவ-மாணவிகளும் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
- புதுநடுவலூர்-நொச்சியம் சாலையில் உள்ள மின்மாற்றி ஒன்று பலத்த மழையின்போது பழுதானது. ஆனால் அந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படவில்லை.
- இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்பகிர்மான பொறியாளர் அலுவலகத்தின் முன்பு உள்ள சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர்-நொச்சியம் சாலையில் உள்ள மின்மாற்றி ஒன்று பலத்த மழையின்போது பழுதானது. ஆனால் அந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படவில்லை.
இதனால் 30 விவசாய மின் இணைப்புகளும், 10 வீட்டு மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொது மக்களுக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தின் முன்பு உள்ள சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் வந்து, மின்மாற்றியை பழுது நீக்கியோ அல்லது மாற்று ஏற்பாடு செய்தோ மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40).
- சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், சரவணனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.
- தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும்
அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும்,
வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும், வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பஸ் வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
- ண்ணாம்பு கல் ஏற்றிக்கொண்டுவேப்பூரிலிருந்து கிழப்பழூர்கிராமத்திற்கு வந்துக்கொண்டிருந்த–போது அரியலூர் புறவழிச்சாலை ராவுத்தம்பட்டி அருகே எதிர்பாரதவிதமாக திடிரென லாரி தீப்பிடித்து எரிந்ததில் லாரி முழுவதும் சேதமடைந்தது.
- சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர் சம்பத்திற்கு லாரியின் காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரமும் இன்னும் 45 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வழங்க வேண்டும்
பெரம்பலூர்:
சேலம் மாவட்டம்,கெங்கவல்லி தாலுகா, கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் சம்பத் (47). இவர் டிப்பர் லாரி ஒன்று வாங்கி அதற்கு பெரம்பலூரில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவன கிளையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம்தேதி சுண்ணாம்பு கல் ஏற்றிக்கொண்டுவேப்பூரிலிருந்து கிழப்பழூர்கிராமத்திற்கு வந்துக்கொண்டிருந்த–போது அரியலூர் புறவழிச்சாலை ராவுத்தம்பட்டி அருகே எதிர்பாரதவிதமாக திடிரென லாரி தீப்பிடித்து எரிந்ததில் லாரி முழுவதும் சேதமடைந்தது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
இதையடுத்து லாரி உரிமையாளர் சம்பத் காப்பீட்டு நிறுவனத்தை அனுகி லாரிக்கான இன்சூரன்ஸ் தொகை வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கு இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர், அதிக பாரம் ஏற்றி சென்றதால் தான் தீவிபத்து ஏற்பட்டு லாரி சேதமடைந்தது. ஆகையால் காப்பீட்டு தொகை வழங்கமுடியாது என கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்சம்பத், லாரி காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நிவாரண தொகையாக ரூ. 1 லட்சமும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கோர்ட் தலைவரும், நீதிபதியுமான ஜவஹர் மற்றும் கோர்ட் உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி,
இந்த சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர் சம்பத்திற்கு லாரியின் காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரமும் இன்னும் 45 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வழங்க வேண்டும். இல்லையென்றால் தீர்ப்பு வழங்கிய ஜூன் மாதம் முதல் தரவேண்டிய தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
- மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
பெரம்பலூர்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூரில் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மனோகரன், நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள், மாவட்ட பொறுப்பாளர் ஆசைத்தம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னசாமி,
சிறுபான்மையர் பிரிவு பொறுப்பாளர் பத்தோதின், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பாலமுருகன், சட்டமன்ற இளைஞர் அணி துணை தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மகேந்திரன், அரும்பாவூர் நகர தலைவர் தேவராஜ், செந்துறை பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் உட்பட பல கலந்து கொண்டனர்,
- பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த குமரிமன்னன், அண்மையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேரவில்லை.
- குமரிமன்னனை சஸ்பெண்டு செய்ததோடு, அவரது பணிக்காலத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கக் கோரி 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர் குமரிமன்னன் பணி காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என 6 பேர் கொண்ட குழுவினர் 3-வது நாளாக நேற்றும் தொடராய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த குமரிமன்னன், அண்மையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேரவில்லை.
இந்நிலையில் குமரிமன்னனை சஸ்பெண்டு செய்ததோடு, அவரது பணிக்காலத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கக் கோரி 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார்.
இதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட விசாரணை குழுவினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் குமரிமன்னால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள்,
பொது சுகாதாரப்பிரிவில் தனியார் மயம், கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்து குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதாக என்பதை 3 வது நாளாக நேற்றும் (16ம்தேதி) தொடராய்வு மேற்கொண்டனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜெயபால்பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக கம்பி எடுத்து அடித்துள்ளார்.
- அப்போது கம்பி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55), விவசாயி.
இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக கம்பி எடுத்து அடித்துள்ளார். அப்போது கம்பி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்து ஜெயபால் சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
- வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிகாடு,
வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
- அம்பேத்கர் நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவிற்கு குடிதண்ணீர் கடந்த ஒரு வாரமாக சப்ளை செய்யப்படவில்லை.
அதாவது பொது குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் கலியன் என்பவரிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, அவர் பொதுமக்களிடம் சரியான பதிலைத் தராமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் பிரபு, ஊராட்சி செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் தனஞ்ஜெயன் மற்றும் அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டரை மாற்றி விடுவதாகவும், உடனடியாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.
இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
- முகாமில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலா–தவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
- வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கை–யற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழ–ங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வ.கீரனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலாதவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
வேளாண்மைத் துறை மூலம் மருந்து தெளிப்பான் இயந்திரம் வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மேலும் இந்த முகாமில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, சமூக நல தாசில்தார் சின்னத்துரை, வேப்பூர் ஒன்றிய துணை தலைவர் செல்வராணி வரதராஜன்,
வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், மனோகரன், தீரன் சின்னமலை, சேஷாத்திரி, ராஜேஷ் கண்ணா, ராஜேஷ்வரி வளர்மன்னன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






