என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.7.38 லட்சம் காப்பீடு தொகை வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
  X

  பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.7.38 லட்சம் காப்பீடு தொகை வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ண்ணாம்பு கல் ஏற்றிக்கொண்டுவேப்பூரிலிருந்து கிழப்பழூர்கிராமத்திற்கு வந்துக்கொண்டிருந்த–போது அரியலூர் புறவழிச்சாலை ராவுத்தம்பட்டி அருகே எதிர்பாரதவிதமாக திடிரென லாரி தீப்பிடித்து எரிந்ததில் லாரி முழுவதும் சேதமடைந்தது.
  • சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர் சம்பத்திற்கு லாரியின் காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரமும் இன்னும் 45 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வழங்க வேண்டும்

  பெரம்பலூர்:

  சேலம் மாவட்டம்,கெங்கவல்லி தாலுகா, கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் சம்பத் (47). இவர் டிப்பர் லாரி ஒன்று வாங்கி அதற்கு பெரம்பலூரில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவன கிளையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார்.

  இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம்தேதி சுண்ணாம்பு கல் ஏற்றிக்கொண்டுவேப்பூரிலிருந்து கிழப்பழூர்கிராமத்திற்கு வந்துக்கொண்டிருந்த–போது அரியலூர் புறவழிச்சாலை ராவுத்தம்பட்டி அருகே எதிர்பாரதவிதமாக திடிரென லாரி தீப்பிடித்து எரிந்ததில் லாரி முழுவதும் சேதமடைந்தது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

  இதையடுத்து லாரி உரிமையாளர் சம்பத் காப்பீட்டு நிறுவனத்தை அனுகி லாரிக்கான இன்சூரன்ஸ் தொகை வழங்குமாறு கேட்டுள்ளார்.

  இதற்கு இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர், அதிக பாரம் ஏற்றி சென்றதால் தான் தீவிபத்து ஏற்பட்டு லாரி சேதமடைந்தது. ஆகையால் காப்பீட்டு தொகை வழங்கமுடியாது என கூறியுள்ளார்.

  இதனால் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்சம்பத், லாரி காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நிவாரண தொகையாக ரூ. 1 லட்சமும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கை கோர்ட் தலைவரும், நீதிபதியுமான ஜவஹர் மற்றும் கோர்ட் உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி,

  இந்த சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர் சம்பத்திற்கு லாரியின் காப்பீட்டு தொகையான ரூ. 6 லட்சத்து 87 ஆயிரத்து 927 ரூபாயும், மன உளைச்சாலுக்கான நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரமும் இன்னும் 45 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வழங்க வேண்டும். இல்லையென்றால் தீர்ப்பு வழங்கிய ஜூன் மாதம் முதல் தரவேண்டிய தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.


  Next Story
  ×