என் மலர்
நீங்கள் தேடியது "3-வது நாளாக விசாரணை குழு ஆய்வு"
- பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த குமரிமன்னன், அண்மையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேரவில்லை.
- குமரிமன்னனை சஸ்பெண்டு செய்ததோடு, அவரது பணிக்காலத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கக் கோரி 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர் குமரிமன்னன் பணி காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என 6 பேர் கொண்ட குழுவினர் 3-வது நாளாக நேற்றும் தொடராய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த குமரிமன்னன், அண்மையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேரவில்லை.
இந்நிலையில் குமரிமன்னனை சஸ்பெண்டு செய்ததோடு, அவரது பணிக்காலத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கக் கோரி 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார்.
இதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட விசாரணை குழுவினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் குமரிமன்னால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள்,
பொது சுகாதாரப்பிரிவில் தனியார் மயம், கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்து குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதாக என்பதை 3 வது நாளாக நேற்றும் (16ம்தேதி) தொடராய்வு மேற்கொண்டனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






