என் மலர்
பெரம்பலூர்
- வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் வடிவேல்சாமியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழனியை சேர்ந்த வக்கீல்கள் சுரேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் படியும், கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதன்பேரில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டு பணிகளையும் புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன."
- நகர்மன்ற கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர், நகர்மன்ற துணை தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
தங்களது வார்டு பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தாலும், மேலும் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை தங்களிடம் கேட்டு தீர்மானத்தில் சேர்க்காத காரணத்தாலும் மாதாந்திர கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்டது. அவர்களை தவிர்த்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."
- சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். பள்ளி சிறுவர்-சிறுமிகளுக்கு காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். சத்துணவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மணிமேகலா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கொளஞ்சிவாசு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆனந்தராஜ், செல்லப்பிள்ளை, ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் வாழ்த்்தி பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.
- அய்யம்பாளையம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
- 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருச்சி:
முசிறி அடுத்த அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், உதவி தலைமை ஆசிரியை பவானி, உடற்கல்வி ஆசிரியர் வசந்த், தி.மு.க. புறநகர் மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாவதி, மனச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், மாவட்ட இளைஞரணி கார்த்திக், முசிறி ஒன்றிய துணைச் செயலாளர் மூர்த்தி ,ஒன்றிய கவுன்சிலர் ஜானகி அண்ணாதுரை, தொண்டரணி சரவணன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளம்சேட்சென்னி, வட்டார ஒருங்கிணைப்பாளர் நடேசன் ஆசிரியர் பயிற்றுநர் பர்வின், மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவர் வெளியூரில் இருந்து வந்த தனது மகளை அழைத்து வர அரியலூருக்கு சென்றார். வழியில் அவரை மறித்த 7 பேர் கொண்ட கும்பல், இரும்பு ஆயுதங்களால் அவரை தாக்கி கொலை செய்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சிவசாமி, நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் செல்லதுரை(வயது 21), பாண்டியனின் மகன் பாலமுருகன்(21) மற்றும் 16 வயது சிறுவன் என 3 பேரை நேற்று குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் கைது செய்தார். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்."
- பெரம்பலூரி போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
- பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர்:
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள், தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இதையொட்டி நேற்று மதியம் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வடக்கு மாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு வழியாக காமராஜர் வளைவில் நிறைவு பெற்றது. பேண்டு வாத்தியம் முழங்க நடந்த இந்த அணிவகுப்பில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் லெப்பைக்குடிக்காட்டிலும் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது."
- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 41). இவரது மனைவி பிரபாவதி (35). இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கோவிந்தசாமி தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரபாவதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ேகாவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள நல்லிணக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வலியுறுத்தப்பட்டது
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்பு குழுகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கைசாயங் களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலைகளை வழி பாடு நடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.
சிலை நிறுவும் இடங்களில் மின்சாரத்துறையினரை தொடர்பு கொண்டு முறையான மின் இணைப்புகளை பெற்று பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான வாகன ஊர்வலம் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட வேண்டும். போலீசாரால் குறிப்பிடப்படும் வழித்தடங் களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதி அளிக் கப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழாவை எவ்வித பிரச்சினைகளும் இன்றி சமுதாய நல்லிணக்கத்து டன் சுமூகமான முறையில் கொண்டாட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் டாக்டர் செந்தில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அரவிந்தன் உள் ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து திருக்கோயில் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் காசி முனியப்பன் கோவிலில் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். இக்கூட்டத்தில் அனைத்து கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஆலயங்களில் புனரமைக்க பட வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான பாதைகளை தனிநபர் தடுக்கவோ, மறுக்கவோ கூடாது , அனைத்து கோவில்களிலும் விளக்கு எரிய நிர்வாகிகள் பாடுபட வேண்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் குத்தகை பணத்தை பெற்று ஆலய கும்பாபிஷேக திருப்பணி செய்ய வேண்டும், அனைத்து ஆலய பூசாரிக ளுக்கு ஊதியம் அதிகமாக பெற்றுத்தர வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஆசைத்தம்பி, மற்றும் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சூரியகுமார் நன்றி கூறினார்.
- அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட
- கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி
பெரம்பலூர்:
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணி நேர விரிவுரையாளர்கள் விடுமுறை நாளான நேற்றும் 4-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னை தலைமை செயலகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திப்பதற்காக இரவில் புறப்பட்டு சென்றனர்.
- பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. மீண்டும் இரவு 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- செட்டிகுளம்-20, பாடாலூர்-2, அகரம்சீகூர்-1, லெப்பைகுடிகாடு-2, பெரம்பலூர்-12, எறையூர்-8, கிருஷ்ணாபுரம்-3, வி.களத்தூர்-8."
- விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திaரன் (வயது 47), விவசாயி. இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு ரெயிலில் வந்த தனது மகளை அழைத்து செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் இரும்பு ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சிவசாமி (60), நடராஜன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் 7 பேர் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்."






