என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து திருக்கோயில் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
    X

    இந்து திருக்கோயில் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்

    • இந்து திருக்கோயில் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் காசி முனியப்பன் கோவிலில் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். இக்கூட்டத்தில் அனைத்து கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஆலயங்களில் புனரமைக்க பட வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான பாதைகளை தனிநபர் தடுக்கவோ, மறுக்கவோ கூடாது , அனைத்து கோவில்களிலும் விளக்கு எரிய நிர்வாகிகள் பாடுபட வேண்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் குத்தகை பணத்தை பெற்று ஆலய கும்பாபிஷேக திருப்பணி செய்ய வேண்டும், அனைத்து ஆலய பூசாரிக ளுக்கு ஊதியம் அதிகமாக பெற்றுத்தர வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஆசைத்தம்பி, மற்றும் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சூரியகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×