என் மலர்
பெரம்பலூர்
- விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 5,423 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா பெரம்பலூர் அரசு பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைச்சர் சிவசங்கர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.
- மின்வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அகவிலைப்படியை உயர்த்தி தரக்கோரி
பெரம்பலூர்:
அகவிலைப்படியை உயர்த்தி தரக்கோரி பெரம்பலூரில் மின்வாரிய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவும் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய அலுவலர்கள் அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும் என்று மின்வாரியத்தையும், அரசையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.
- மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், வடக்கு தெரு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது 2-வது மகள் ரேணுகா(வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று வாயில் நுரை தள்ளியவாறு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ரேணுகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்."
- மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 211 மனுக்களை பெற்றார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். காலத்துக்கு ஏற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழு நேர ஊழியர்களாக்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகை செலவுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். போக்குவரத்து படி, உணவு படி, மருத்துவ உபகரணம் பராமரிப்பு படி வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும். ஊழியர்களின் பணிகளில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்தி சுதந்திரமாக பணியாற்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 211 மனுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது
- சிறுமி பாலியல் வழக்கில் தீர்ப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயதுள்ள விவசாயிக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமம், நடுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன் (50). விவசாயியான இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதியன்று அதே கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து நடந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. தீர்ப்பை மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல் நேற்று வாசித்தார். அப்போதுள சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து மருவத்தூர் போலீசார் சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் கோர்ட்டில் குற்றவாளிக்கு முதன் முதலாக சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கிற்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோர்ட் வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.
- தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுaத்தப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்:
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் படிவம் 6-பி-யில் தங்கள் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொண்டனர்."
- பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
- துக்க காரியத்துக்கு சென்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம்சீகூர் காலனி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கலியம்மாள் (வயது 75). விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கலியம்மாள் நேற்று மதியம் அத்தியூருக்கு துக்க காரியத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அத்தியூரில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அகரம்சீகூர் காலனி தெரு நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துவதற்காக டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தாக கூறப்படுகிறது. அப்போது பஸ்சில் இருந்து இறங்குவதற்காக கலியம்மாள் படிக்கட்டு அருகே வந்த போது நிலைதடுமாறி, பஸ்சில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கலியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- நிறுத்தப்பட்ட நகர பேருந்து சேவையை தொடர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர்கேட் வரை இயக்கப்படும் ஒரு அரசு டவுன் பஸ் தினமும் காலை, மதியம், இரவு ஆகிய நேரத்தில் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் சென்று வந்தனர்.
ஆலத்தூர்கேட்டிலிருந்து துறையூருக்கு இரவும், துறையூரிலிருந்து அதிகாலை ஆலத்தூர்கேட்டிற்கும் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பயணிகள் பலரும் ஆலத்தூர் கேட்டில் இருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் நலன் கருதி பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரே நாளில் 10,289 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்
பெரம்பலூர்:
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 35-வது சிறப்பு முகாம்கள் நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 10,289 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,607 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- கார் கண்ணாடியை உடைத்து துணிகள் திருட்டுபோனது.
- விடுதி அறையில் தங்கினார்.
பெரம்பலூர்:
ஈரோடு சேட்டு காலனி, 4-வது வீதி, அகில் மேட்டை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 47). இவர் கடந்த 23-ந் தேதி ஈரோட்டில் ஜவுளியை மொத்தமாக வியாபாரம் செய்யும் ஒரு கடையில் இருந்து வியாபாரத்திற்காக மாதிரி துணிகளை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியின் முன்பு காரை நிறுத்திவிட்டு, அந்த விடுதி அறையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை.
பெரம்பலூர்:
மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்திகளுக்கு பேட்டி அளித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது, விக்ரம் போர்க்கப்பல் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடியது. இதற்காக நான் மத்திய அரசை பாராட்டுகிறேன், டெல்டா மாவட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள், தமிழக அரசு வழங்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பணிகள் தேவையில்லை ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் த.மா.க சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும், வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல அதனை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும், கொரோனாவிற்கு பிறகு மற்ற நாடுகளை பார்க்கும் பொழுது 140 கோடி மக்களை கொண்ட இந்தியா, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
- கொள்ளை குறித்து பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
பாடலூர்:
பெரம்பலூர் அருகே பாடலூர் பகுதியில் ஒரு அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் கடையில் விற்பனை களை கட்டியது.
பின்னர் இரவு 9.50 மணி அளவில் சூப்பர்வைசரான பெரம்பலூர் கனரம்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 50), விற்பனையாளரான துரைமங்கலம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராம்குமார்( 44), உதவி விற்பனையாளரான ஜெகன் ஆகிய மூன்று பேரும் விற்பனையான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் கடை முன்பு திபுதிபுவென வந்து இறங்கினர்.
அதில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை இயக்கிய படி நின்று கொண்டிருந்தனர். நான்கு பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ. 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்க பணத்தை அள்ளிக்கொண்டு வெளியேறினர்.
பின்னர் கடை முன்பு தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இது பற்றி பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.






