என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்- ஜி.கே.வாசன்
    X

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்- ஜி.கே.வாசன்

    • பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை.

    பெரம்பலூர்:

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்திகளுக்கு பேட்டி அளித்தார்.

    பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது, விக்ரம் போர்க்கப்பல் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடியது. இதற்காக நான் மத்திய அரசை பாராட்டுகிறேன், டெல்டா மாவட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள், தமிழக அரசு வழங்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பணிகள் தேவையில்லை ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் த.மா.க சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும், வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல அதனை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும், கொரோனாவிற்கு பிறகு மற்ற நாடுகளை பார்க்கும் பொழுது 140 கோடி மக்களை கொண்ட இந்தியா, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×