இளம்பெண் திடீரென உயிரிழப்பு

இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
இளம்பெண் திடீரென உயிரிழப்பு
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், வடக்கு தெரு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது 2-வது மகள் ரேணுகா(வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று வாயில் நுரை தள்ளியவாறு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ரேணுகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்."

X

Maalai Malar
www.maalaimalar.com