என் மலர்
பெரம்பலூர்
- மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூரில் மின்ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குரோடு அருகே உள்ள மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். கள உதவியாளர் உள்ளிட்ட 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அகவிலைப்படி மற்றும் தற்காலிக பணியாளர்கள் (எஸ்.எல்.எஸ்.) பெற்றுவந்த சலுகைகளை உடனே வழங்க வேண்டும். அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் கழிவறைகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
- சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளை போனது
- பூட்டிய வீட்டை நோட்ட மிட்டு கைவரிசை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருபவர் திருத்தணிகைநாதன் (வயது 52). இவரது மனைவி மாரியம்மாள் (48). மகன் தில்லைபார்வதி (20). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினியரிங் படித்து வருகிறார்.
திருத்தணிகைநாதன் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சொந்தமான குடியிருப்பு வாளாகத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். மகன் மதுரையில் படித்துவருவதால்,திருத்தணிகைநாதன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இவர் வழக்கம் போல் நேற்று பணிக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளது. ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருத்தணிகைநாதன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளையும் பார்வையிட்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
- புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 90 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் பாடாலூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி(வயது 52) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மொத்தம் சுமார் 90 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி மோதி தொழிலாளி பலியானார்
- குடும்பத்துடன் வெண்பாவூர் வந்துள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் ஜட்ஜ்(வயது 48). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா(42). இவர்களுக்கு திருமணமாகி தேவராஜ்(15) என்ற மகனும், நந்திதா(13) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜட்ஜ் 2 நாட்களுக்கு முன்பு தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் வெண்பாவூர் வந்துள்ளார். நேற்று காலை வெங்கனூரில் உள்ள கோவிலில் அந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு ஜட்ஜ் ஒரு மோட்டார் சைக்கிளில் வெங்கனூரில் இருந்து வெண்பாவூருக்கு சென்றுள்ளார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கல்லாற்று பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஜட்ஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் ஜட்ஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜட்ஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- மோட்டார் சைக்கிளை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
- பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த குணா (28) என்பவர் திருட முயன்றார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பள்ளி மாணவி குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்
- துணி துவைக்க சென்றபோது விபரீதம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் தேரடி தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது மகள் வித்யா(வயது 14). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஒதியம் கிராமம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள குட்டையில் துணி துவைக்க சென்றார். பின்னர் துணிகளை துவைத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப காலை கழுவும்போது சறுக்கி குட்டையின் நீரில் விழுந்தார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வித்யாவை மீட்டு குன்னம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வித்யாவின் தந்தை முத்தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்"
- ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.
- குடும்பத்துடன் ஊருக்கு சென்றுவிட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகர் 3-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது 45). இவருக்கு கலைமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கலைமணி ஆலத்தூர் தாலுகா, காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, பெரியேரி கிராமத்துக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவை சாவி மூலம் திறந்து, அதில் வைத்திருந்த 3¾ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
- ஒரேநாளில் 11,619 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
- 36-வது சிறப்பு முகாம்கள்
பெரம்பலூர்
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 36-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 11,619 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."
- லாரி மீது வேன் மோதியதில் 11 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர்.
- ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது
பெரம்பலூர்
தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் மாநாடு நடந்தது. இதில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் இருந்து 4 தலைமை ஆசிரியர்கள், 13 ஆசிரியர்கள் என மொத்தம் 17 பேர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாநாடு முடிந்து சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சின்னாறு பகுதியில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தினால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்தவர்களில், 3 பெண் ஆசிரியைகள் உள்பட 11 ஆசிரியர்கள் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் 10 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பசும்பொன்னின் மனைவி முத்துலட்சுமி (வயது 57) என்பவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வெடிவிபத்து தொடர்பான வழக்கில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வெடிகளில் ஒன்று சிதறி, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகன் லலித்கிஷோர்(வயது 9) படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தான். ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா(32), திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா(21) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன்(27) மணிகண்டன்(34) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து முன் அனுபவம் இல்லாதவர்களை வெடி வெடிக்க செய்ததாக கோவில் நிர்வாகிகள் தேவராஜ்(50), கனகராஜ்(48), ராமலிங்கம்(66), கோவிந்தசாமி(42) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
- மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
- காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்."
- பெரம்பலூர் மாவட்டத்தில் நடை–பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்
- பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் குன்னம் தாலுகா ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த தையல் தொழிற்சாலையையும், பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தையும்,
முத்துநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தையும், குன்னம் தாலுகா பரவாய் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், உதவி மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






