என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கலெக்டரிடம் மனு அளித்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வடக்குமாதவி 8-வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் பயன்படுத்தி வந்த தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளியை முன்னிட்டு ரூ.14.86 கோடிக்கு மது விற்பனையானது
    • பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் 90 டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் மதுவிற்பனை நடந்தது. இதன்படி 21ம்தேதி அயல்நாட்டு இந்திய தயாரிப்பு மதுபான ரகங்கள் ரூ.2 கோடியே 14 லட்சத்து 36 ஆயிரத்து 190-க்கும், பீர் ரகங்கள் ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 780 என மொத்தம் ரூ. 2 கோடியே 42 லட்சத்து, 43 ஆயிரத்து 970க்கும், 22ம்தேதி மதுபான ரகங்கள் ரூ.2 கோடியே 40 லட்சத்து, 12 ஆயிரத்து 390க்கும், பீர் ரகஙங்கள் ரூ. 34 லட்சத்து 38 ஆயிரத்து 775க்கும் என மொத்தம் ரூ.2 கோடியே 74 லட்சத்து, 51 ஆயிரத்து 165க்கும், 23ம்தேதி மதுபான ரகங்கள் 3 கோடியே 96 லட்சத்து, 22 ஆயிரத்து 120க்கும், பீர் ரகங்கள் 70 லட்சத்து 92 ஆயிரத்து 715க்கும் என மொத்தம்

    ரூ.4 கோடியே 67 லட்சத்து 14 ஆயிரத்து 835க்கும், தீபாவளியன்று (24ம்தேதி) மதுபான ரகங்கள் 3 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரத்து 40க்கும், பீர் ரகங்கள் ஒரு கோடியே 17 லட்சத்து 33 ஆயிரத்து 230க்கும் என மொத்தம் ரூ.5 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 270க்கும் விற்பனை ஆனது. இதன்படி மொத்தம் 14 கோடியே 86 லட்சத்து, 40 ஆயிரத்து 240க்கு விற்பனையாகியுள்ளது என டாஸ்மார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

    • அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாரவிரதம் நடைபெற்றது
    • பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பொதுமக்கள் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் சசிக்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டம் சுமார் 5மணிநேரம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    • பெரம்பலூர் கடைவீதியில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்ற–ப்படுவதாக கூறப்படுகிறது.
    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் கடைவீதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றும் முடிவினை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மாலையில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்
    • கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வடக்குமாதவி 8 வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது.

    இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • குடிமை பொருள் வழங்கல் குற்றப்பு–லனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமை–யிலான போலீசார் வாலி–கண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பெரம்பலூர் - வி.களத்தூர் சாலையில் நெற்குணம் சந்திப்பு பகுதி அருகே வி.களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அரிசியை கடத்தி வந்தவரிடம் விசாரணை செய்தபோது பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மேலத்தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் கலியபெருமாள் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேனையும், அரிசி மூட்டையும் பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்து சுங்கச்சாவடி ஊழியர் சாவு
    • நகராட்சி அலுவலகம் பின்புறம் நீதியரசன் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதியரசன் (வயது 56). இவர், பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் தற்காலிக நேர காப்பாளராக பணிபுரிந்து, தற்போது சமயபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில், நீதியரசன் பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் உள்ள அவர் குடியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது நகராட்சி அலுவலகம் பின்புறம் அவர் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் அந்த வழியே சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39).
    • ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39). இவர் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் ரகுவரன்-ரேவதி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ், வீடு திறந்திருந்ததை பார்த்து ரேவதிக்கு செல்போனில் தகவல் அளித்தார். அதனைத்தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புடவைக்கு அடியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ரேவதி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர்,

    சிறுநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×