என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பந்தட்டை  பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
    X

    வேப்பந்தட்டை பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மாலையில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×