என் மலர்
பெரம்பலூர்
- செட்டிகுளத்தில் புதிதாக தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் முன்பு தொடங்கி குன்னுமேடு குடியிருப்பு வழியாக சிற்றேரி கடைகாலுக்கு செல்லும் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த தாா் சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.
மேலும் போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நூத்தப்பூர் கிராமத்தில் வடக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது
- ஆக்கிரமிப்பை பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அரவிந்தன், நில அளவர்கள் ஆகியோர் கிராம மக்கள் முன்னிலையில் அகற்றினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் கிராமத்தில் வடக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்பை பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அரவிந்தன், தனி தாசில்தார் பிரகாசம், நூத்தப்பூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர், நில அளவர்கள் ஆகியோர் கிராம மக்கள் முன்னிலையில் அகற்றினர்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இந்து சமய அறநிலையத்துறை பிரிவு 70 பி-யின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
- முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
முகாமிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ஆண்டாள் குடியரசு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்துமதி தர்மராஜன் முன்னாள் ஆசிரியர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அகரம்சீகூர் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் உள்ள புல், பூண்டு செடி கொடிகள் அகற்றப்பட்டன.
அதன் பின் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டன. மாலையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் நாகராஜன் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
- பசு கன்று குட்டி வீட்டிற்கு அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்து விட்டது.
- கிணற்றில் அதிக ப்படியான செடி கொடிகள் படர்ந்து இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கன்று குட்டியை மீட்க முடியவில்லை.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள பென்ணக்கோணம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மகாதேவி (வயது45)
இவருக்கு சொந்தமான பசு கன்று குட்டி உள்ளது.இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சுமார் 5 அடி நீளம் 5 அடி அகலம் கொண்ட 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்து விட்டது.
கிணற்றில் அதிக ப்படியான செடி கொடிகள் படர்ந்து இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கன்று குட்டியை மீட்க முடியவில்லை. இதையடுத்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து சென்று தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் ராஜராஜன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.
- சின்னசாமி 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
- மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது37). கொத்தனாரான இவர் 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த திருமணத்திற்கு சின்ன சாமியின் தாயும், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னசாமி, அவரது தாய் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து குழந்தை திருமண செய்த சின்னசாமியை கைது செய்தனர்.
- பெரம்பலூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் பயணித்தால் 100 லிருந்து 1,000, கார்களில் சீட்டு பெல்ட் அணியாமல் பயணித்தால் 100 லிருந்து 1000,
பெரம்பலூர் :
பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் சார்பில்மோட்டர் வாகன சட்ட திருத்தப்படி, வாகன ஓட்டிகள் விதி மீறுலுக்கான புதிய அபராதம் குறித்து, டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், குருநாதன், ஆரோக்கியசாமி ஆகியோர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அபராத விவரங்கள் (ரூபாயில்) : பொது விதிமுறை மீறல் பழைய அபராதம் (ப) 100, புதிய அபராதம் 500, 2வது முறை 1500, சாலை ஒழுங்கு மீறல் (ப)100, பு - 500, 2வது முறை 1500, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது 200 லிருந்து 500, அதிவேகத்திற்கு 400லிருந்து, 1000, ஆபத்தான வகையில் வகனம் ஓட்டுதலுக்கு 1000, 2வது முறைக்கு 10 ஆயிரம், ரேஸ் ஈடுபட்டால் 500 லிருந்து 5000, 2வது முறைக்கு 10 ஆயிரம், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதலுக்கு 100 லிருந்து, 1000,
ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழி விடாமல் இருத்தல் 10 ஆயிரம், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 1000 லிருந்து 2000, 2வது முறைக்கு 4000 ஆயிரம், தடை செய்யப்பட்ட பகுதியில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலிப்பா ன்களை பயன்படுத்துதல் 1000, 2வது முறைக்கு 2ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் பயணித்தால் 100 லிருந்து 1,000, கார்களில் சீட்டு பெல்ட் அணியாமல் பயணித்தால் 100 லிருந்து 1000,
குழந்தைகளுக்கு தேவையான சீட்டு பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருத்தல் 1000, பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 2,500 லிருந்து 5,000, சரக்கு வாகனங்களில் உத்தரவுக்கு பின்னரும் எடையை குறைக்காமல் இருந்தால் 40,000, நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை விட அதிகமான நபர்களை ஏற்றினால், தலா ஒரு பயணிக்கு 200,
காற்று, ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் இயக்கினால் 10,000, வாகனங்களில் தேவையற்ற மாற்றங்கள் செய்தல் 5,000, வாகனத்தை புதுப்பிக்க தவறுதல் 500 லிருந்து 1,500, வாகனங்களில் படிக்கட்டில் பயணித்தால் 500 லிருந்து 1,500, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 என வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைத்தனர்.
மேலும், வாகன ஓட்டிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கி அபராதத்தில் காத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதே போல், பாலக்கரை, புது பஸ் ஸ்டாண்ட், ரோவர் ஆர்ச், கடைவீதி, பழைய பஸ் ஸ்டாணட், மார்க்கட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவரது மனைவி ஜீவா (வயது 40). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜீவாவுக்கு உதவியாக அவருடன், அவரது தாய் சின்னம்மாள் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஜீவா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சின்னம்மாள் கடைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த ஜீவா திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறியபடி ஜீவா வீட்டின் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஜீவா மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி
பெரம்பலூர்
பெரம்பலூர் மதர்சா சாலையை சேர்ந்தவர் கமால்பாட்ஷா. இவர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சல்மான் (வயது30). பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் லைபரிக்கு வரும் போது சல்மானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் காதலித்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தை கூறிய சல்மான் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நான் கூப்பிடும் போதெல்லாமல் வர வேண்டும். இல்லை யென்றால் வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டி அந்த இள ம்பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக சல்மான் இருந்துள்ளார்.
இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம டைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சல்மான் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தமுடியாது என கூறிவிட்டார்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளம்பெண்ணை திருமணம் செய்வதாய் கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சல்மான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல் இளம்பெண்ணிடம் திரு மணம் செய்துகொள்வதாய் ஆசை வார்த்தைக் கூறி பழகி, கற்பழித்து ஏமாற்றிய சல்மானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அபராத தொகையில் ரூ.1.75 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சல்மான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
- எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.
தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
- விவசாயத் தோட்டத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
- கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கொளக்காநத்தம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இந்த தம்பதியருக்கு சுரேஷ்(38)என்ற ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் கூட்டாக தங்களது தோட்டத்தில் சோளம் மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கண்ணன் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் சுரேஷ் ,மருமகள் பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை ஓட்டிக்கொண்டு விவசாயத் தோட்டத்துக்கு சென்றனர்.
அடித்துக் கொலை
பின்னர் மதியம் 12:30 மணிக்கு சுரேஷ் தனது மனைவி பத்மாவதி உடன் மதிய சாப்பாட்டுக்கு வீடு திரும்பினார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவரது தாயார் விஜயலட்சுமி தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கொலை வழக்கு பதிவு பதிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட விஜயலட்சு மியின் பின்பக்க தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய தடயங்களை போலீசார் கண்ட றிந்துள்ளனர். ஆனால் கொலையாளி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமி அணிந்திருந்த தாலிச் செயின் மற்றும் கம்மல்கள் அப்படியே இருந்தன. எனவே கொள்ளை யர்களுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் விசாரணையின் கோணம் மாறி உள்ளது.
சம்பவம் நடந்தபோது விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உடனிருந்து உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போது நான் அருகாமையில் உள்ள காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டி ருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது தோட்டத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
- அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி 2 இடங்களில் உள்ள வீடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக பொது மக்கள் குன்னம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் மற்றும் தனி வருவாய் அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி அல்லி நகரம் அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ரேஷன் அரிசியை எவ்வாறு இவ்விடத்தில் கடத்தி வந்தனர் என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- குடும்ப அட்டைதாரா்களுக்கு
பெரம்பலூர்
பெரம்பலூர் துறைமங்கலம் நியாய விலை கடையில், கூட்டுறவுத் துறை சார்பில் சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய நடுத்தர பெண் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் எரிவாயு சிலிண்டர் விற்பனையைத தொடக்கி வைத்து பேசியதாவது:
எரிவாயு சிலிண்டர் முதன் முறையாக பெறும் போது ரூ. 1,520 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, அதை மீண்டும் நிரப்புவதற்கு ரூ. 576.50 செலுத்த வேண்டும். இம் மாவட்டத்திலுள்ள 197 முழுநேரக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் உள்ள 3 பகுதி நேரக் கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, பெரம்பலுார் வட்டத்தில் 48 நியாயவிலைக்கடைகளும், ஆலத்துார் வட்டத்தில் 43 கடைகளும், குன்னம் வட்டத்தில் 50 கடைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 59 கடைகளும் என மொத்தம் 200 நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்தப்படும் என்றார்.
இந் நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ், நகர் மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






