என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வெங்காய கொட்டகையில் இருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • திருச்சி தடயவியல் துறையினர் சோதனை நடத்தினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மனைவி முத்துகண்ணு (வயது70). இவர் கடந்த 19ந் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அன்று இரவு முத்துக்கண்ணு தேனூரில் உள்ள ரவி (51) என்பவரது வயலில் வன விலங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி தடயவியல் துறையினர் ரவியின் வயலுக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது ரவியின் வெங்காய கொட்டகையில் வெடிபொருட்களான 12 டெட்டனேட்டர், 8 பாக்கெட் ஜெல் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தடயவியல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் வார விழா நடந்தது.
    • மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. விழாவையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் புதிதாக இணைந்த நூலக புரவலர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் கூத்தரசன் வரவேற்று பேசினார். முடிவில் நூலகர் சித்ரா நன்றி கூறினார்.


    • வழி கேட்பது போல் பேசினர்
    • பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி சம்பூரணம் (வயது 55). இவர் தனது வயலில் இருந்து கால்நடைகளை வீட்டுக்கு ஒட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சம்பூரணம் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பாதுகாப்பு போலீசார் அவரை வெளியேற்றினர்
    • மது போதையில் மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மது போதையில் ஒருவர் தனது தெரிந்த நபருடன் மனு கொடுக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கையில் வைத்திருந்த மனுவில், ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையின் போது அன்னதானம் வழங்கவும், பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று மல்லுக்கட்டி அந்த போதை நபரை பிடித்து கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.




    • மாவட்ட விளையாட்டு அலுவலர்-பயிற்சியாளரை விரைந்து கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.
    • பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகளில், சிலரிடம் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வரப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தர்மராஜன், சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளர் சின்னப்பொண்ணு தலைமையில், அச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து திடீரென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா கலந்து கொண்டு மேற்கண்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனையும், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரையும் போலீசார் விரைந்து கைது செய்யக்கோரியும், தர்மராஜனை போல் சுரேஷ்குமாரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
    • பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என கூறியுள்ளார்.


    • அதிகாலை வீட்டை விட்டு சென்றுள்ளார்
    • மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலியானார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மனைவி முத்துகண்ணு(வயது 70). இவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் முத்துகண்ணுவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு அருகே உள்ள தேனூரில் உள்ள ஒருவரின் வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்களை சுற்றி வன விலங்குகளுக்காக போடப்பட்டுள்ள மின் வேலியில் முத்துகண்ணு சிக்கி இடது கணுக்காலில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
    • மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்திற்கு 14 விருதுகள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய மருத்துவ சங்க மாநாடு நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் பணிகளை பாராட்டி 14 விருதுகளை பெரம்பலூர் மருத்துவ சங்கம் சமூக சேவைக்காகமுதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மேலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது. தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தது. தமிழக அளவில் சாதனை படைத்த இந்திய மருத்துவ சங்கத்தில் அதிக அளவில் டாக்டர்களை உறுப்பினர்களாக சேர்த்தது மற்றும் சமூக சேவையினையும் பாராட்டியும் 14 விருதுகளை பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருக்கு சென்னையில் நடந்த சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது. இதனை பெரம்பலூர் சங்க நிர்வாகிகளும் மருத்துவர்கள், டாக்டர்கள் வல்லபன், சுதாகர், செங்குட்டுவன், சுமதி செங்குட்டுவன், திருமால், ராஜா முகமது, பகுத்தறிவாளன், கலா, நேரு, ரமேஷ், அன்பரசன்ஆகியோரிடம் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், செயலாளர் டாக்டர்.தியாகராஜன் முன்னிலையில் 14 விருதுகள் பெரம்பலூர் சங்கத்துக்கு வழங்கினர். முன்னதாக புதிய மாநில மருத்துவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் செந்தமிழ் பாரிக்கு பெரம்பலூர் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


    • தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
    • துணி துவைக்கும் போது சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பேரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை ப ார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணா பள்ளியில் விஜய் திவஸ் தின விழா நடைபெற்றது
    • நிறுவனத் தலைவர் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜய் திவஸ் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, விஜய் திவஸ் என்று நாம் கொண்டாடும் விழாவானது வெற்றி வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவாகும். 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் அவரது 93 ஆயிரம் படை வீரர்களும் இந்திய வங்க தேச ராணுவத்திடம் சரணடைந்தனர். இதன் விளைவாக உருவானது தான் புதிய வங்கதேசம். இதனை மீட்டெடுக்க நம் நாட்டு வீரர்கள் இந்த யுத்தத்தில் பலர் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவஸ் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    டெல்லி இந்தியா கேட்டின் முப்படை தளபதிகளும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவர். அவர்களுடன் சேர்ந்து நாமும் இத்தியாக வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். இன்றைய மாணவர்கள் நம் இந்தியாவை அடிமைப்படுத்த நினைப்பவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மருதுதுரை, பிரியா, ஸ்ரீவாணி, செல்வராணி, துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.

    • உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது
    • கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்

    பெரம்பலூர்:

    கிராமப்புறங்களை மையமாகக்கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பல்வேறு கடன் உதவிகள் மூலம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோணேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் 29.1.2022 அன்று விவசாய பயிர்க்கடன் பெற்றதன் காரணமாக இப்கோ டோக்கியோ நிறுவனம் மூலம் தனிநபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 18.3.2022 அன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்தார்.

    அதை தொடர்ந்து அவர் தனிநபர் விபத்து காப்பீடு செய்திருந்த நிலையில் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இப்கோ டோக்கியோ நிறுவனத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவருக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையினை பெற்றது.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் தலைமையில் கலெக்டர் வெங்கடபிரியா, உயிரிழந்த விவசாயின் மனைவி பாப்பாத்தியிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் செல்வராஜ் சங்க செயலாளர் பிரபாகரன் உடனிருந்தனர்.

    • வெல்டிங் பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை. இவரது மகன் சின்னதுரை(வயது 24). இவர் எசனையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திக்கொண்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சின்னதுரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×