என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VIJAY DIWAS DAY CELEBRATION"

    • ராமகிருஷ்ணா பள்ளியில் விஜய் திவஸ் தின விழா நடைபெற்றது
    • நிறுவனத் தலைவர் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜய் திவஸ் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, விஜய் திவஸ் என்று நாம் கொண்டாடும் விழாவானது வெற்றி வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவாகும். 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் அவரது 93 ஆயிரம் படை வீரர்களும் இந்திய வங்க தேச ராணுவத்திடம் சரணடைந்தனர். இதன் விளைவாக உருவானது தான் புதிய வங்கதேசம். இதனை மீட்டெடுக்க நம் நாட்டு வீரர்கள் இந்த யுத்தத்தில் பலர் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவஸ் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    டெல்லி இந்தியா கேட்டின் முப்படை தளபதிகளும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவர். அவர்களுடன் சேர்ந்து நாமும் இத்தியாக வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். இன்றைய மாணவர்கள் நம் இந்தியாவை அடிமைப்படுத்த நினைப்பவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மருதுதுரை, பிரியா, ஸ்ரீவாணி, செல்வராணி, துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.

    ×