என் மலர்
நீங்கள் தேடியது "4 LAKH"
- உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது
- கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்
பெரம்பலூர்:
கிராமப்புறங்களை மையமாகக்கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பல்வேறு கடன் உதவிகள் மூலம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோணேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் 29.1.2022 அன்று விவசாய பயிர்க்கடன் பெற்றதன் காரணமாக இப்கோ டோக்கியோ நிறுவனம் மூலம் தனிநபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18.3.2022 அன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து அவர் தனிநபர் விபத்து காப்பீடு செய்திருந்த நிலையில் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இப்கோ டோக்கியோ நிறுவனத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவருக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையினை பெற்றது.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் தலைமையில் கலெக்டர் வெங்கடபிரியா, உயிரிழந்த விவசாயின் மனைவி பாப்பாத்தியிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் செல்வராஜ் சங்க செயலாளர் பிரபாகரன் உடனிருந்தனர்.






