என் மலர்
நீலகிரி
- அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்
- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றுவதாக உறுதி
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் 2019-2020 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலையினையும், 2022-2023-15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்டு சாலையினையும் என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.
மேலும், அவர் 2022-2023 நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரையிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பணிக ளுக்கு பூமி பூஜைகளை தொடங்கிவைத்தார்.
செங்கல்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிறிஸ்தவர்களுக்கு அன்பின் விருந்து உபசரிப்பு தரப்பட்டது
- அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது
ஊட்டி,
ஊட்டி பேண்டு லைன் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 11-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன்ஒருபகுதியாக அன்பின் விருந்து உபசரிப்பு நடந்தது.
இதனை தி.மு.க நகர செயலாளர் ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மாலை 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது.அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தேர் பவனியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
- சொந்த ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு
- பெற்றோர் அளித்த ஊக்கத்தால் சாதித்ததாக பேட்டி
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் ஹட்டி எனப்படும் கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை விவசாயம் மற்றும் மலைகாய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரிஅருகே உள்ள குருகத்தி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கு கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது, பைலட் ஆகி விமானத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஐடி வேலையை விட்டு விட்டு, தென்ஆப்பிரிக்காவில் பயிற்சிகளை முடித்து தற்போது பைலட் ஆகி சாதனை படைத்து உள்ளார்.
இந்த நிலையில் பைலட் ஜெயஸ்ரீ தென்னாப்பிரிக்காவில் இருந்து நீலகிரியில் உள்ள சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது இவரை ஊர் மக்கள் திரண்டு வரவேற்றனர். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் வீட்டுக்கு சென்ற ஜெயஸ்ரீ பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றார்.
நீலகிரியின் படுகர் சமுதாயம் மட்டுமின்றி மாவட்டத்தின் முதல் பெண் விமானி என்ற சாதனை படைத்து உள்ள அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது குறித்து விமான பைலட் ஜெயஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விமானத்தை இயக்கும் பைலட் ஆக வேண்டும் என்பது சிறுவயது கனவு. இதற்கு என் பெற்றோர் உதவியாக இருந்து வந்தனர். அதனால் தான் என்னால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தேன். அப்போது தான் பைலட் படிப்புக்கான முயற்சிகளை மேற் கொண்டேன். தென்னாப்பிரிக்காவில் பைலட் படிப்புக்கு இடம் கிடைத்தது.
நான் உடனடியாக புறப்பட்டு சென்று படிப்பில் சேர்ந்தேன். அங்கு தொடக்கத்தில் பயிற்சிகள் மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அங்கிருந்தவர்கள், உன்னால் முடியும் என ஊக்கப்படுத்தினர். அதுதான் என்னை இப்போது வெற்றி திருமகளாக அடையாளம் காட்டி உள்ளது. இதனால் எனக்கு மட்டுமல்ல, படுகர் சமுதாயத்திற்கும் பெருமை வந்து சேர்ந்து உள்ளது.
என்னை போல பலரும் பைலட் துறையில் சாதிக்க வேண்டும். அப்படியான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு என்னால் முடிந்தவரை வழிகாட்டு தல்களை சொல்லிக் கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயஸ்ரீ தந்தை மணி கூறுகையில், குழந்தைகள் என்னவாக வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களின் லட்சியங்கள் நிறைவேறும். அதற்கு தாய்-தந்தையர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ பெண் பைலட் ஆனது எங்களுக்கு மட்டு மல்ல, படுகர் இனத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கும் கிடைத்து உள்ள பெருமை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு தனி துணை ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு
- ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர்கள், மாவட்ட தொழில்மையம், தாட்கோ மற்றும் வங்கி மேலாளர்கள் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் அனைத்து வங்கியாளர்களுக்கான இணை மானிய நிதி திட்ட விளக்க பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட செயல்அலுவலர்ரமேஷ்கிருஷ்ணன் பங்கேற்று பயிற்சி அளித்தார்.
மேலும் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு தனி துணை ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில்மைய மேலாளர், தாட்கோ மேலாளர், வங்கி மேலாளர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
- 30 தலைப்புகளில் தபால் ஸ்டாம்ப் சட்டகங்கள் இடம்பெற்று உள்ளன
- பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், தபால் தலை கண்காட்சியகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்
ஊட்டி,
ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் இளையதலைமுறையினரிடம் அஞ்சல் தலையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் தபால் ஸ்டாம்ப் தொகுப்பு கண்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு தாவரங்கள், விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, ரெயில்வே வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள், புவியியல் குறியீடு ஆகிய தலைப்புகளில் 30 தபால் ஸ்டாம்ப் சட்டகங்கள் இடம்பெற்று உள்ளன.
மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளம்தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் பல்வேறு நினைவு பொருட்கள், தபால்தலை விற்கும் கவுன்டர், மை ஸ்டாம்ப் விற்பனை கவுன்டர் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் ஸ்டாம்ப் தொகுப்பு கண் காட்சியகத்தை தமிழ்நாடு வட்ட தபால்துறை தலைவர் சாருகேசி தொடங்கி வைத்தார்.
கோவை ஆர்.எம்.எஸ். முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அகில் நாயர், ஊட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா, மேற்கு மண்ட தபால்துறை உதவி இயக்குநர் கமலேஷ், கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ஜெயராஜ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தபால்துறை சார்பில் வினாடி-வினா போட்டி, கடிதம் எழுதுதல் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் தபால் ஸ்டாம்புகளை காட்சிப்படுத்திய சேகரிப்பாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், தபால் தலை கண்காட்சியகத்தை நேரடியாக சுற்றிப்பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் ஸ்டாம்ப் தொகுப்பு கண்காட்சியகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை திறந்தி ருக்கும். பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்த்து மகிழலாம் என்று அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நொறுக்கு தீனியை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை
- காய்கறி, பழம், கீரை சாப்பிடுவதால் ஊட்டசத்து கிடைக்கும் என ஆலோசனை
ஊட்டி,
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு நடுநிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி நிர்வாகம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமாரி, தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர், மாணவர்கள் ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள், கீரைகள்ஆகியவற்ைற அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் உடலில் ஊட்டசத்து கிடைக்கும். நொறுக்கு தீனி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு படையினர் மழையை பொருட்படுத்தாது சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்
- இரவு 7 மணிக்கு போக்குவரத்து சீரானது
ஊட்டி,
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக கூடலூர், பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் தொடர் மழை பெய்தது. இதேபோல் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் மாலை 6 மணிக்கு சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்தது.
இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மழையை பொருட்படுத்தாது சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் வெளியூர் செல்லும் வாகனங்கள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- போராட்டக்காரர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
- ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தேயிலை விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது 8-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று நடந்த போ ராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மேல்பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை, கட்டபெட்டு ஊர் தலைவர் மடியாகவுடர், மல்லிகொரெ ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், ஒன்னோரெ ஊர் தலைவர் கிருஷ்ணா கவுடர், மஞ்சிதா ஊர் தலைவர் சண்முகா கவுடர், பேரட்டி ஊர் தலைவர் காந்தி கவுடர் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் மேல்பிக்கட்டி, கீழ்பிக்கட்டி, கட்டபெட்டு, மல்லிகொரெ, ஒன்னோரெ, மஞ்சிதா, பேரட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு வந்தனர்.
அப்போது குன்னூர் போலீஸ் டி.எஸ்.பி குமார் போராட்ட களத்துக்கு வந்து நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் தேயிலை விவசாயிகள், இலை பறிக்க செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தனர்
- ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட் டக்கலைத் துறை கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், தாட்கோ, ஆவின், வாழ்ந்து காட்டுவோம், தோட்டக்க லைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை கள் சாா்பில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியோா் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் சுற்றுலா அமைச்சா் ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் தேயிலை, காபி தூள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், சாக்லெட், வா்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து தொழில் தொடங்கி வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
பின்னா் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் (பொ) கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்க லைத் துறை இணை இயக்குநா் ஷபிலாமேரி, ஆவின் பொதுமேலாளா் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, தாட்கோ பொது மேலாளா் ரவிசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- 4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இதுவரை பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏ.டி.எஸ்.பி. முருகவேல், வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு விசாரணையை இறுதி செய்ய அவகாசம் தேவை என கூறப்பட்டு இருந்தது. இதை ஏற்று நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலும் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தபடி உள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
- மாணவர்களுக்கு கற்றலில் மேம்பாடு, நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்து விளக்கம்
- நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
நீலகிரி பந்தலூர் பந்தலூர்அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் பஜித்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபு வரவேற்று பேசினார். திறன் மேம்பாட்டு பயிற்ச்சியாளர்கள் ரவீந்திரன், மற்றும் அஜித் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், சுய பரிசோதனை, தீர்மானமான முடிவுகள் எடுத்தல், திறமைகளை எவ்வாறு உணர்வது, அவற்றை மேம்படுத்துதல், கல்வியின் முக்கியத்துவம், கற்றலில் மேம்பாடு, நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார்.
- கிளிஞ்சடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குட்டியுடன் சுற்றி வருகின்றன
- யானைகளை ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கொலக்கம்பை கிராமத்தில் தனியாா் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5 காட்டு யானைகள் புகுந்தன. அப்போது அவை அங்கு உள்ள ரேஷன் கடை, அங்கான்வாடி மையம், மளிகைக்கடை ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்தின.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்று விட்டன.
கொலக்கம்பை, கிளிஞ்சடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குட்டியுடன் 5 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.
எனவே அவற்றை ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், கெத்தை வனப்பகுதிக்குள் யானைகள் விரைவில் திருப்பி அனுபப்படும் எனவும் வனத்துறையினா் உறுதியளித்தனா்.






