என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஊட்டியில் குவியும் வாகனங்கள்
    • நிரந்தர தீர்வு காணப்படுமா?

    ஊட்டி:

    கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலமான ஊட்டிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டியில் ஆயிர க்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் நேற்று பல இடங்களில் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இருந்தா லும் பெரும்பாலான சாலை களில் வாகன நெரிசல் காணப்பட்டது.

    குறிப்பாக, தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் மட்டுமின்றி வாகன நெரிசலும் ஏற்பட்டது.நெரிசலில் சிக்கி சுற்றுலாபயணிகளும், உள்ளூர் காரர்களும் குறித்த நேரத்தில் ெரயில்வே நிலை யத்துக்கும், கோவையிலுள்ள விமான நிலையத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

    ஊட்டி நகரில் தினந்தோறும் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சரி செய்ய போதிய எண்ணிக்கையில் போலீசாரும் நிறுத்தப் படுவதில்லை. ஒரு முறை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தால் நிலைமை சீராவதற்கு 2 மணிநேரம் கூட ஆகிறது.

    வார இறுதி நாட்களில், நாள்தோறும், 15 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். இதனால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய இடமில்லாததால், வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    ஊட்டியில் பார்க்கிங் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் எந்த திட்டமும் செயல்ப டுத்தப்பட வில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல திட்டங்கள் வரும் என எதிர் பார்த்து ஊட்டி மக்களும் சோர்ந்து போய் விட்டனர்பல அடுக்கு வாகன நிறுத்தம் இதற்கு முடிவு கட்டும் ஆனால் யார் செயல்படுத்துவார்கள், எப்போது செயல் படுத்துவார்கள் என்பது விடை தெரியாத கேள்வி யாகவே தொடர்கிறது

    • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது
    • மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு

    ஊட்டி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது.

    பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.அவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நாளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஒரே பூமி என்ற கருபொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மீண்டும் மஞ்சப்பை குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. நீலகிரியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

    • விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    அரவேனு,

    கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் வழியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வீழ்ச்சி சுற்றிலும் அதிகப்படியான விவசாய பூமிகள் இருந்து வருகிறது. மேலும் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் நீரின் மூலம் மசக்கல் கூக்கலதெறை பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சைனீஸ் காய்கறிகள் எனப் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனைத்து சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதாலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    • சாலைகளில் கடும் வாகன நெரிசல்
    • 50,ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவை பாா்வையிட்டுள்ளனா்

    ஊட்டி,

    ஊட்டியில் கோடை சீசன் முடிவடையும் தருவாயில் இன்னமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு மலா்க்காட்சி முடிவடைந்த பின்னரும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதில் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை சுமாா் 50,ஆயிரம் சுற்றுலாப் பயனிகள் ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவை பாா்வையிட்டுள்ளனா்.

    கடந்த வியாழக்கிழமை சுமாா் 12,500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை 14 ஆயிரமாகவும் , சனிக்கிழமை அதிகபட்சமாக 18ஆயி ரமாகவும் அதிகரித்திருந்தது.

    அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவில் வியாழக்கிழமை சுமாா் 6,500 பேரும், வெள்ளிக்கிழமை 7,500 பேரும் வந்திருந்த நிலையில், சனிக்கிழமை 10,000ஆக அதிகரித்திருந்தது.இதைப்போலவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்க ளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13-ந் தேதிக்குப் பிறகே திறக்கப்பட உள்ளது.

    இதனால் அடுத்த வாரம் வரையில் ஊட்டி மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது.நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் வசூல் செய்யப்பட்டது
    • 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டி பயன்படுத்துபவா்களை கண்காணித்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வந்தால் கல்லாறு, பா்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா், ஊட்டி, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதில் ஊட்டி நகரப் பகுதியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வட்டாட்சியா் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளா் மகேந்திரகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.இந்த ஆய்வின்போது மாா்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.38,500 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனைகளில் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.சோதனையின்போது ஊட்டி மாவட்ட நகராட்சி மாா்க்கெட் பகுதியில் குட்கா விற்பனை செய்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×