என் மலர்
நீலகிரி
- உள்ளாட்சி அமைப்புகளின் முதல் முறையாக நகர வாடு சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது
- குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது மற்றும் 17-வது வார்டில் நகர வார்டு சபை கூட்டம் நடந்தது.
குன்னூர்,
குன்னூர் நகர வார்டு சபை கூட்டம் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று ஒன்றாம் தேதி உள்ளாட்சி அமைப்புகளின் முதல் முறையாக நகர வாடு சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது மற்றும் 17-வது வார்டில் நகர வார்டு சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 12 மற்றும் 17-வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் தேவைகள் குறித்து ேபசினர். சிலர் தங்கள் பகுதிக்கு தேவையானவற்றை மனுவாகவும் எழுதிக் கொடுத்தனர். கூட்டத்தில் குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற முன்னாள் தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி, நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர், பொதுமக்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்படுகிறது.
- குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கோத்தகிரி,
கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக நாள் ஒன்றிற்கு 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று 9-வது வார்டு பகுதிக்கான கூட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் முக்கிய குறைகளான நடைபாதை அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், தெருவிளக்கு கம்பம் புதிதாக அமைத்தல் போன்றவை முக்கிய குறைகளாக கருதப்பட்டு அதனை உடனடியாக சரி செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பேசிய பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி அவர்கள் இப்பகுதியில் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.இதே போன்று மிஷன் காம்பவுண்ட் பகுதியிலும் கூட்டம் நடைபெற்றது.
- வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
- கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் கரடி, காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்த சில தினங்களாக அதிகளவு தென்படுகிறது. நேற்று முன்தினம் கரடி ஒன்று சாலையோரம் வந்தது. அப்போது மசினகுடிக்கு சென்று திரும்பிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி கரடியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இதனால் கரடி வந்த வழியாக திரும்பி சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சாலையில் வாகனங்களில் செல்லும்போது வனவிலங்குகள் நிற்பதை கண்டு ரசிப்பது தவறு இல்லை. ஆனால், வாகனங்களை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் எளிதில் தாக்கும் குணம் உடையவை. தற்போது கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு
நீலகிரி மாவட்ட பெண்கள் இணைப்பு குழு சார்பாக கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பெண் குழந்தைகள் பற்றிய உரிமைகள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், பெண் குழந்தை பாலியல் தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு, கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஐலண்டு அறக்கட்டளை இயக்குனர் அல்போன்ஸ்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, அகரம்சிவா, பெண்கள் அமைப்பை சேர்ந்த லட்சுமி, விஜயநிர்மலா, ரஞ்சனி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.
அரவேணு,
கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- நோய் தொற்றா? அல்லது விஷம் வைத்து கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.
- பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம்.
குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இவை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.
இவைகளில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வந்தது காட்டுப் பன்றிகள். ஏனெனில் இவைகள் விவசாய நிலங்களில் இருக்கும் பொருட்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. மேலும் காட்டு பன்றிகள் மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வந்தது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிக அளவு மர்மமான முறையில் இறந்து வருகிறது. இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளிலேயே அதிக அளவு இறந்து வருவதால் அவைகளுக்கு ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இறந்ததா? அல்லது கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. மனிதர்களுக்கும் இவைகளால் ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- அனுமதி பெறாமல் நடத்தியதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும்.
ஊட்டி,
ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ரவிகுமாா், ஆணையா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
ஜாா்ஜ் தி.மு.க.): ஊட்டி மாரியம்மன் கோவில் முதல் பஸ் நிலையம் வரை லோயா் பஜாா் சாலையின் இருபுறம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. இதற்கு உரிய தீா்வு காண வேண்டும்.
முஸ்தபா (தி.மு.க.): ஊட்டி நகரில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். நகரின் முக்கிய இடங்களில் சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (தி.மு.க. ): பருவ மழை தொடங்கி யுள்ள நிலையில் காந்தல் பகுதியில் கால்வாய்கள் இன்னும் முழுமையாக தூா்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீருடன் சோ்ந்து மழைநீா் குடியிருப்புகளுக்குள் புகக் கூடிய அபாயம் உள்ளது.
ரவி (தி.மு.க. ): ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது தொடா்பாக சிலா் நகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தியதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்ல சாலையோரத்தில் நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி துணைத் தலைவா் ரவிகுமாா்: கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் தவிா்த்து பிற வாா்டுகளில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டங்களில் தலையிட்டால் தவறு. ஆனால் பிற வாா்டுகளில் சட்ட விரோதமாக நடைபெறும் ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் போன்றவை தொடா்பாக யாா் வேண்டுமானாலும் தலையிடலாம். நகராட்சியில் சில இடங்களில் கால்வாய்கள் கூட ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளன.
ரமேஷ் (தி.மு.க.): வாா்டு பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கான டெண்டா் விடப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
கஜேந்திரன் (தி.மு.க.): குன்னூா் சாலையில் ஆவின் முதல் சவுத்வீக் வரை பல இடங்களில் தனியாா் பணிமனைகள் முளைத்துள்ளன. தலையாட்டுமந்து பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும்.
உறுப்பினா்கள் பேசிய கருத்துகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை ஆணையா் தெரிவித்தாா்.
- 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
- குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.
இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.
இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.
- வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, மழைநீர் கால்வாய்கள் அமைப்பது, பாலங்கள் பழுது பார்ப்பது, சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் கட்டபெட்டு வரை ரூ.50 லட்சம் செலவில் குறுகிய சாலைகளை விரிவாக்கம் செய்து, மழைநீர் எளிதில் வழிந்தோடும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதே போல நகரின் முக்கிய சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- புதர்மறைவில் மறைந்து இருந்த காட்டெருமை திடீரென சசிதரனை தாக்கியது.
- ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் வனதுறையினர் ரோந்து பணி சென்றனர். அப்போது புதர்மறைவில் மறைந்து இருந்த காட்டெருமை திடீரென சசிதரனை தாக்கியது.
இதில் அவா் படுகாயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அரவேணு,
கோத்தகிரியில் சக்தி மலையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் சூரா சம்ஹார விழா நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்தது. மதியம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- முதல் கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, விபத்துக்குள்ளானது.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஊட்டியை நோக்கி ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் 12 பேர் இருந்தனர். இந்த வேன் முதல் கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேனில் வந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






