என் மலர்tooltip icon

    நீலகிரி

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர்மீதும் அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று எஸ்.கைகாட்டி மற்றும் ஓம்நகர் பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும் போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    • நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.
    • குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது.

    கோத்தகிரி:

    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

    பலத்த மழைக்கு ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டனர். தகவல் அறிந்து வருவாய் த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வீடுகளில் மீட்பு பணியை துரித படுத்தி பணிகளை மேற்கொண்டனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சிறு, சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நேற்று பெய்த மழையில் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் பிரதான சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த சோலூர்மட்டம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை போராடி அப்புறப்படுத்தினர். இதனால் இந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி அரசு தொடக்க பள்ளியில் சேரம்பாடி போலீசார் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், விஜயன், சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ் ஆகியோர் பேசும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இதனால் சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற வேண்டும் என்றனர். முடிவில் ஆசிரியர் சதீஸ் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • பட்டா இல்லாத நிலங்களில் வீடு இருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
    • வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்

    கூடலூர்,

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பட்டா இல்லாத நிலங்களில் வீடு இருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைக்க வேண்டும்.

    வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் யசோதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லீலா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுஜி, நிர்வாகிகள் ஜெஷா, கிரிஜா புல் மற்றும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதியிடம் மனுக்களை அளித்தனர். அப்போது ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி என்பவர் கூடுதல் பொறுப்பாக மசினகுடி அரசு பள்ளிக்கு நியமிக்கப்பட்டார்.

    கூடலூர்,

    கூடலூர் அருகே மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலூர் அரசு பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி என்பவர் கூடுதல் பொறுப்பாக மசினகுடி அரசு பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சி அளித்ததன் மூலம் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

    இந்தநிலையில் மசினகுடி அரசு பள்ளிக்கு வேறு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இதனால் உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி சோலூர் பள்ளியில் பணியாற்ற கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை அறிந்த மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடற்கல்வி ஆசிரியரை அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் போலீசார், அதிகாரிகள் வந்து உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில் நேற்று உடற்கல்வி ஆசிரியரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதற்கான ஆணையை வழங்கினால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்வதாகவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபோட போவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    அவர்களுடன் பெற்றோரும் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர் மசினகுடி பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆணை வந்தது. அதன் பின்னரே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    • சிறுத்தை அப்பகுதிக்கு வந்தது குறித்து வனத்துறையின் மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
    • சிறுத்தை உயிரிழந்தது என கண்டுபிடிப்பதற்காக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    கூடலூர்,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையில் உதவி வனபாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதீர்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் சிறுத்தை அப்பகுதிக்கு வந்தது குறித்து வனத்துறையின் மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இருப்பினும் சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் முக்கிய உடற்பாகங்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறுத்தை புலியின் உடல் அப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 6 வயதான ஆண் சிறுத்தை இறந்து 2 நாட்கள் இருக்கலாம்.

    அதன் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இருப்பினும் எதனால் சிறுத்தை உயிரிழந்தது என கண்டுபிடிப்பதற்காக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    • வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • ஒரே நாளில் ரூ.55 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? ஹெல்மெட் அணிந்துள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.

    சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 22 வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 30000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இரண்டாவது முறை இதே போன்று விதிகளை மீறினால் அபராத தொகை பன்மடங்கு போடப்படும் எனவும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

    • வயதான காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்ணீர் மல்க அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் கூறி அழுதார்.
    • ஓவேலியில் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டதாகவும், அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினார்.

    கூடலூர்:

    தென்னையை வளர்த்தால் இளநீர்... பிள்ளையை பெற்றால் கண்ணீர் என்ற திரைப்பட பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதை போல சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 81). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். முத்தம்மாவுக்கு 3 ஆண், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்தம்மா நேற்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் பிள்ளைகள் யாரும் கவனிப்பது இல்லை. இதனால் வயதான காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்ணீர் மல்க அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் கூறி அழுதார். தொடர்ந்து அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்தார். அங்கு ஆர்.டி.ஓ. இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டி முத்தம்மாவிடம் விசாரித்தனர்.

    ஓவேலியில் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டதாகவும், அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், தற்போது தன்னை கவனிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. எனவே, வயதான காலத்தில் நிம்மதியாக இருப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தார்.

    மூதாட்டியின் நிலையை கண்ட வருவாய்த்துறையினர் கூடலூர் போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பிள்ளைகளை பெற்றும் கவனிப்பாரின்றி மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • குன்னூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி முழுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளபடும் அபாயம் உள்ளதால் இதை முழுமையாக தடுக்க வேண்டும்

    ஊட்டி,

    குன்னூர் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஷிலா கேத்தரின், ஆனையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க நகர செயலாளரும், கவுன்சிலருமான சரவணகுமார் பேசுகையில், உலக சுற்றுலா தினத்தன்று தமிழக அரசு அறிவித்திருக்கும் ஹோம் ஸ்டே திட்டத்திற்கு (குடியிருப்பு அனுமதி பெற்று அந்தக் கட்டிடத்தில் காட்டேஜ் நடத்த அனுமதி) திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்.

    இது நகராட்சியன் வருவாயை மொத்தமாக முடக்கும் திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்ற பட்டால் பல தேவையில்லாத பிரச்சனைகளும் சடட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதை தொடக்கத்திலேயே கை விட வேண்டும். எனவே அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இந்த திட்டத்தை கைவிடும்படி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். தற்போது நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி முழுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளபடும் அபாயம் உள்ளதால் இதை முழுமையாக தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை உணவு திட்டம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும்வரவேற்கதக்க ஒரு திட்டமாகும்.
    • 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என சட்சபையில் அறிவித்தார்.

    அதன்படி மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாயமார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சிப் பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளிலும் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளிலும் 10,161 மாணவர்கள், என 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இத்திட்டத்தின்படி, திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமையன்று கோதுமை ரவை மற்றும் காய்கறி கிச்சடி, புதன்கிழமையன்று வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமையன்று அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமையன்று சேமியா, காய்கறி கிச்சடி, ரவை கேசரி ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 16.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் ஒருங்கிணைப்பு பணிகள் செய்யப்படுகிறது.

    இத்திட்டம் குறித்து ஆசிரியை ஆயிஷா கூறுகையில் :

    நான் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இத்திட்டம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும்வரவேற்க தக்க ஒரு திட்டமாகும்.

    இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தியதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும், பள்ளி சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தையின் தாயார் ரேணுகா தேவி கூறுகையில், எனது மகள் பெயர் மித்ரா. நான் கூடலூர் காமத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மகள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை துவக்க பள்ளியில், 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நானும் எனது கணவரும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலைநேரத்தில் வேலைக்கு சென்று விடுவோம். எனது குழந்தைகளுக்கு காலையில் உணவு செய்து கொடுத்து விட்டு செல்வதென்பது மிகவும் சிரமமாக இருந்தது. சில நேரங்களில் காலை உணவு இல்லாமல் எனது மகள் பள்ளிக்கு செல்வாள். இச்சூழ்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மூலம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் காலை உணவுகள் வழங்கப்படுகிறது. கிராமக்குழந்தைகளின் தேவை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தமிழக அரசு, குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் இது போன்ற ஒரு சிறந்த திட்டத்தினை கொண்டு வந்து மிகச் சிறப்பாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தியமைக்காக, நீலகிரி மாவட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்து உள்ளனர்.  

    • சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
    • வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது

    கோத்தகிரி ,

    நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்துசுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் அதிவேகமாகவும் செல்கின்றன. வளைவுகளில் கனரக வாகனங்கள் வேகமாக திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் கோத்தகிரி, ஊட்டி சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×