என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்
- பட்டா இல்லாத நிலங்களில் வீடு இருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
- வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்
கூடலூர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பட்டா இல்லாத நிலங்களில் வீடு இருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைக்க வேண்டும்.
வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் யசோதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லீலா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுஜி, நிர்வாகிகள் ஜெஷா, கிரிஜா புல் மற்றும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதியிடம் மனுக்களை அளித்தனர். அப்போது ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






