என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானை சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா திருவள்ளுவர் நகரில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. பின்னர் காட்டுயானைகள் செடி, கொடிகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த வாழைமரங்களையும் சேதப்படுத்தி சென்றது.

    குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானை சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டியடித்தனர். அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இத்தனை ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு யானை வந்ததில்லை. இதுவே முதல்முறை. யானை வந்ததால் அச்சம் ஏற்பட்டது. இங்குள்ள செடிகளையும் சேதப்படுத்தி உள்ளது. யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டம் கூடலூா் தேவா்சோலை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூா் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூா் தேவா்சோலை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கடையின் தரைத்தளத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதில், கடையில் இருந்த பொருள்கள் வெடித்து சிதறின. தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக ஒடி வந்து தீயணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

    சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அந்த சமயம் கடையில் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக கூடலூரில் இருந்து கேரளா மாா்க்கமாக செல்லும் போக்குவரத்து சுமாா் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூா் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
    • வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    அப்பகுதியிலேயே சில நாள்கள் சுற்றித்திரிந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன.

    இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு, ரன்னிமேடு இடையே உள்ள தேயிலை தோட்டம், சோலைப் பகுதிகளில் பல்வேறு விதமான பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக அப்பகுதியில் 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க 6 போ் கொண்ட வன ஊழியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

    இந்நிலையில் நேற்று இரவு ரன்னிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது.

    டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான்.

    இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்

    • கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • கரடி சிறிது நேரம் கழித்து தானாகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. கோத்தகிரி டானிங்டன் சாலையில் அதிகாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, போலீசாரின் வாகனத்தை கரடி ஒன்று வழிமறித்து நின்றது. இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்தவாறே சப்தம் எழுப்பினர். சாலையின் நடுவிலேயே அமர்ந்திருந்த கரடி சிறிது நேரம் கழித்து தானாகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, போலீசார் வாகனம் புறப்பட்டுச் சென்றது.

    • வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.
    • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கூடும் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. இதில் குறிப்பாக காட்டெருமைகள் மற்றும் கரடிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் புகுந்தது.

    உடனடியாக அங்கிருந்த மக்கள் காட்டெருமை வருவதை கண்டு விலகி சென்றுவிட்டனர். பின்பு அந்த காட்டெருமை அருகில் இருந்த அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்றது.

    இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வவை வழங்கினார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறலைகளை கடைபிடிப்பது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து பஸ்நிலையம் வரையில் போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து ஊர்வலமாக சென்று போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வவை வழங்கினார். முடிவில் கோத்தகிரி பஸ்நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் அனைவரும் தலை கவசம் அணியவேண்டும் என்றும் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கூறினார். மேலும் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
    • வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

    இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர்.

    இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    கூடலூர் பகுதியில் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

    இதுதவிர வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை இனங்களை எடுத்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி,

    பண்டிகை காலங்கள் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக குற்ற செயல்களை முன்கூட்டியே தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. மகேஸ்வரன் மேற்பார்வையில் நேற்று முதல் காவல் துறையின் ரோந்து பணிகள் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா சாலை என முக்கியமான சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • சாலை விதிகளை மீறி மினி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என சோதனை நடந்தது.
    • ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் இயங்கி வரும் மினி பஸ்களில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதிகளை மீறி மினி பஸ்களை இயக்கிய நடத்துனர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சீருடை அணியாதவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஆரோக்கியபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி, குன்னூர் ராஜாஜி நகரில் ஏற்பட்ட சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டது.
    • 4 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிவாரண தொகை, 18 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மழையால் கேத்தி ேபரூராட்சிக்குட்பட்ட மந்தாடாவில் சாலை பழுது ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆரோக்கியபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி, குன்னூர் ராஜாஜி நகரில் ஏற்பட்ட சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த அலுவலர்களிடம் பணிகளை விரைந்து சீரமைக்குமாறு கேட்டு கொண்டனர்.

    தொடர்ந்து மழையால் மந்தாடா பகுதியில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும், ஆரோக்கியபுரம் பகுதியில் 9 குடும்பங்களுக்கும் 5 கிலோ அரிசி, கம்பளி மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

    மேலும் குன்னூர் ராஜாஜி நகரில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 4 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிவாரண தொகை, 18 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

    பாரத் நகரில் வீடு சேதம் அைடந்த புஷ்பம்மாள் என்பவரிடம் மனு பெற்றுக்கொண்ட எம்.பி. ஆ.ராசா அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பிரதான் மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.70 லட்சம் மதிப்பில் ஒருவார காலத்திற்குள் வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் ஆ.ராசா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரியில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு இழப்பீடுகளை மதிப்பீடு செய்துள்ளோம்.

    பாதிக்கப்ப்டட வீடுகளை இழந்த 41 குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, கம்பளி மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சீரமைப்புகள் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதுதவிர காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் பூஷணகுமார்(குன்னூர்), துரைசாமி(ஊட்டி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலை) சங்கர், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உள்பட பலர் இருந்தனர்.

    • ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி சுவாமி தரிசனம் செய்ய சென்றனா்.
    • காட்டாற்று வெள்ளத்தில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி கவரட்டி ஜெக்கலொரை கிராமத்தைச் சோ்ந்த விமலா (35), சுசீலா (56), வாசுகி (45), சரோஜா (65) ஆகியோா் சீகூா் ஆனைகட்டி அருகே உள்ள ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி சுவாமி தரிசனம் செய்ய சென்றனா். தரிசனம் முடிந்து மாலை கெதறல்லா ஆற்றின் தரைப்பாலம் வழியாக ஊருக்கு திரும்பி வந்தபொழுது, திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீலகிரி ஆ.ராசா எம்.பி, சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் ஆகியோா் ஜெக்கலொரை கிராமத்துக்கு நேரில் சென்று தமிழக அரசு அறிவித்த ரூ.4 லட்சம் மற்றும் தி.மு.க சாா்பில் ரூ.1 லட்சத்தை 4 பேரின் குடும்பங்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினாா். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், தி.மு.க மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ளது கள்ளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் ஒரு ஆட்டை புலி கடித்து கொன்றது. புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தங்கள் பகுதியில் சுற்றி திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் முதுகுளி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆட்டை தாக்கிய புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இதையடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து புலி எப்படி இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×