என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
    X

    கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

    • குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானை சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா திருவள்ளுவர் நகரில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. பின்னர் காட்டுயானைகள் செடி, கொடிகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த வாழைமரங்களையும் சேதப்படுத்தி சென்றது.

    குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானை சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டியடித்தனர். அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இத்தனை ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு யானை வந்ததில்லை. இதுவே முதல்முறை. யானை வந்ததால் அச்சம் ஏற்பட்டது. இங்குள்ள செடிகளையும் சேதப்படுத்தி உள்ளது. யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×