search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் குற்ற செயல்களை தடுக்க 24 மணி நேர  ரோந்து பணி
    X

    நீலகிரியில் குற்ற செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து பணி

    • நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி,

    பண்டிகை காலங்கள் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக குற்ற செயல்களை முன்கூட்டியே தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. மகேஸ்வரன் மேற்பார்வையில் நேற்று முதல் காவல் துறையின் ரோந்து பணிகள் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா சாலை என முக்கியமான சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×