என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர், எம்.பி. நேரில் ஆய்வு
  X

  குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர், எம்.பி. நேரில் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆரோக்கியபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி, குன்னூர் ராஜாஜி நகரில் ஏற்பட்ட சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டது.
  • 4 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிவாரண தொகை, 18 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

  ஊட்டி,

  நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டது.

  இந்த நிலையில் மழையால் கேத்தி ேபரூராட்சிக்குட்பட்ட மந்தாடாவில் சாலை பழுது ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆரோக்கியபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி, குன்னூர் ராஜாஜி நகரில் ஏற்பட்ட சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

  பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த அலுவலர்களிடம் பணிகளை விரைந்து சீரமைக்குமாறு கேட்டு கொண்டனர்.

  தொடர்ந்து மழையால் மந்தாடா பகுதியில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும், ஆரோக்கியபுரம் பகுதியில் 9 குடும்பங்களுக்கும் 5 கிலோ அரிசி, கம்பளி மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

  மேலும் குன்னூர் ராஜாஜி நகரில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 4 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிவாரண தொகை, 18 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

  பாரத் நகரில் வீடு சேதம் அைடந்த புஷ்பம்மாள் என்பவரிடம் மனு பெற்றுக்கொண்ட எம்.பி. ஆ.ராசா அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பிரதான் மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.70 லட்சம் மதிப்பில் ஒருவார காலத்திற்குள் வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  பின்னர் ஆ.ராசா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

  நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரியில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு இழப்பீடுகளை மதிப்பீடு செய்துள்ளோம்.

  பாதிக்கப்ப்டட வீடுகளை இழந்த 41 குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, கம்பளி மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சீரமைப்புகள் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இதுதவிர காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் பூஷணகுமார்(குன்னூர்), துரைசாமி(ஊட்டி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலை) சங்கர், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உள்பட பலர் இருந்தனர்.

  Next Story
  ×