என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் பூபால பாடல் நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது.

    ஊட்டி,

    கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது. ஆண்டுதோறும் டிசம்பா் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், உலகை மீட்க வந்த ரட்சகா் இயேசு கிறுஸ்து பிறக்கபோகிறாா் என்ற செய்தியை 4-ம் நூற்றாண்டில் குளிா் காலத்தில் அண்டை வீடுகளுக்கு சென்று பாடல் குழுவினா் எடுத்துரைத்தனா்.

    அதன் அடிப்படையில் உண்டான பூபால பாடல் நிகழ்ச்சி இந்தியா உள்பட பல நாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் பூபால பாடல் நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள கிறிஸ்தவா்கள் இரவு நேரங்களில் மத்தளம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்து கிறிஸ்து பிறப்பை அறிவித்து வருகின்றனா்.

    அதன்படி, சனிக்கிழமை இரவு 7 மணியளவில் தொடங்கிய பூபால பாடல் நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவா்கள் வீடுவீடாகச் சென்று கிறிஸ்து பிறப்பை அறிவித்து, வாழ்த்து கூறினா்.

    • அனைத்து திருச்சபைகள் சார்பில், ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) ஊர்வலம் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் நேற்று அனைத்து திருச்சபைகள் சார்பில், ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.

    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்தார்

    . இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. பஸ் நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நிறைவடைந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • வள்ளலார் இயற்றிய நூல்களின் கண்காட்சியை ரமணா சக்தி சுரேஷ் திறந்து வைத்தார்.
    • திருவருட்பா பாடலை சரவணன் பாடினார்.

    ஊட்டி,

    வள்ளலாரின் 200-வது பிறந்த தின விழா நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பாவேந்தர் இலக்கிய பேரவை மற்றும் தமிழ் இயக்கம் வாசகர் வட்டம் சார்பாக தியான நிகழ்வுடன் நடந்தது. இதில் புலவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.மாவட்ட நூலகர் ரவி முன்னிலை வகித்தார்.வள்ளலார் இயற்றிய நூல்களின் கண்காட்சியை ரமணா சக்தி சுரேஷ் திறந்து வைத்தார்.இதில் சமூக சேவகி உஷா பிராங்கிளின், தமிழ் இயக்கம் செயலர் கீதா குணாளன், வக்கீல் நஜுமா பாய் நசீர், மலைச்சாரல் கவி, மன்ற தலைவர் பெள்ளி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி தஸ்தகீர், நூலக வாசகர் வட்ட தலைவி அமுதவல்லி, மத நல்லிணக்க குழு தலைவர் கிருஷ்ணன், தமிழ் கலை இலக்கியப் பேரவை கூடலூர் தமிழ்ச்செல்வன், மூத்த கவிஞர் சோலூர் கணேசன், கவிஞர் நீலமலை ஜேபி, கவிதாயினி மணி அர்ஜுனன், மதிமாறன் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருவருட்பா பாடலை சரவணன் பாடிட, நூலகர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    • ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • 3 வருடங்களாக இந்த இல்லத்திற்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்கிற மாயன், தனது மனைவி சரோஜாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், தனது மனைவியுடன் கலந்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஆதரவற்றோர் இல்ல நிர்வாக தஸ்தகீர் கலெக்டர் மற்றும் அவரது மனைவிக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இல்ல நிர்வாகி சக்தி சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன் கடந்த 3 வருடங்களாக இந்த இல்லத்திற்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இவர்களின் முகத்தில் மலரும் மகிழ்வை காணும் போது மனதிற்கு மகிழ்வை தருகிறது என்றார்

    • வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன.
    • அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெ ருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வாகனத்தை மறித்தும் வருகிறது.

    இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் வழக்கம் போல் ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

    அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையை நோக்கி வேகமாக வந்தது. சாலையின் நடுவே நின்று கொண்ட காட்டுயானை அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்களை மறித்தது.

    இதனால் அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    யானை நின்றதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் தாங்கள் வந்த வழியே செல்ல முற்பட்டனர். அப்போது சிலர் அலாரம் எழுப்பியதால் மிரண்டு போன காட்டு யானை திடீரென பஸ்சின் அருகே வந்து பஸ்சின் முன் கண்ணாடியை உடைத்தது. மேலும் லாரி மற்றும் கார் கண்ணாடிகளையும் உடைத்து எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயத்தில் உறைந்து போயினர். சற்று நேரம் அங்கேயே சுற்றிய யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. யானை சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அங்கிருந்து வேகமாக இயக்கி சென்றனர். இதனால் இப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ரெயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு.
    • பாறை, மண்குவியலை அகற்றும் பணியால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரெயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன. ரெயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    இதனால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பணிகள் நிறைவு பெற்று ரெயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா்.
    • போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா். வெற்றி திருநாளான இந்நாளை கொண்டாடும் வகையில் ராணுவம் சாா்பில் ஆண்டுதோறும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி 'ரன் வித் சோல்ஜா்' என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    5 கி.மீ., 12.5. கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டு, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில், அய்யப்ப பஜனை சபா சார்பில் 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையில் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு நிறமாலை பூஜை, அன்னதானம் மற்றும் அனைத்து மகளிர் சங்கத்தினரின் சார்பில் திருவிளக்கு பூஜை, ஹரிஹரன் பஜனை சபா சார்பில் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். செண்டை மேளம் முழங்க தேர் புறப்பட்டு வென்லாக் சாலை, கமர்சியல் சாலை வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கால பைரவர் மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் விளக்குகள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அதில் பஞ்ச வாத்தியத்துடன் அய்யப்பன் பவனி வந்தார். இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊட்டி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.
    • துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம்ஷா பேருராட்சியில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் உதவி செயற்பொறியாளர், பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது துணைத்தலைவர் யூனுஸ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர்பாடந்துறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு இம்மாத இறுதியில் புதியபஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி தலைவர் வள்ளி மற்றும் செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நபார்டு திட்ட பணியினை ஆய்வு செய்து உடன் முடித்திட இளநிலை பொறியாளர் வின்சென்ட் மற்றும் சேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

    • பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க இளைஞரணி தலைவர் பிரேம் யோகன் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், நகரத் தலைவர் திரு பிரவீன் ,நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • நஞ்சப்ப சத்திரம் பகுதியில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கோழிகளை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டி சோலை ஊராட்சி ஒன்றியம் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பயனாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகளும் மற்றும் பொருள்கள், மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவித் தொகையும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், குடும்ப அட்டை பெறாதவர்களுக்கு குடும்ப அட்டையும், வயதானவர்களுக்கு நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு கோழிகளை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினர்.குன்னூர் ஊராட்சி ஒன்றியதலைவர் சுனிதாநேரு, வண்டிசோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளாசதிஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×