என் மலர்
நீங்கள் தேடியது "A bear that overturned"
- கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- கரடி சிறிது நேரம் கழித்து தானாகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. கோத்தகிரி டானிங்டன் சாலையில் அதிகாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, போலீசாரின் வாகனத்தை கரடி ஒன்று வழிமறித்து நின்றது. இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்தவாறே சப்தம் எழுப்பினர். சாலையின் நடுவிலேயே அமர்ந்திருந்த கரடி சிறிது நேரம் கழித்து தானாகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, போலீசார் வாகனம் புறப்பட்டுச் சென்றது.






