என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மீண்டும் புத்துயிர் பெறுமா மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சுற்று சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    ஊட்டி, பிப்.2-

    தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும்.இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர்.

    அப்படி வருபவர்களின் முதல் விருப்பம் ஊட்டி தாவிரவியல் பூங்கா. அடுத்த இடத்தில் படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகியவை உள்ளன

    1995ஆம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ஊட்டி அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது.

    இந்த பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

    இங்கு 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளை கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமாா் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    2006-ம் ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் இந்த ரோஜா பூங்காவுக்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய நாட்டுக்கும் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ள இப்பூங்கா, தென்கிழக்கு ஆசியா நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது.

    இத்தனை சிறப்புகள் கொண்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் ரோஜா பூங்கா தற்ேபாது மெல்ல மெல்ல தன் அழகை இழந்து வருகிறது

    பூங்காவின் நுழைவு பகுதியிலேயே சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுதவிர பூங்காவுக்கு ெசல்லக்கூடிய சாலையில் பல இடங்களில் குழிகள் காணப்படுகின்றன.

    மேலும் பூங்காவின் சுற்று சுவரும் சில இடங்களில் இடிந்து விழுந்து உள்ளது. ஆனால் அைவ இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது.

    பூங்கா அருகே உள்ள வாகன நிறுத்தத்தின் சுற்றுசுவரும் இடிந்து விழுந்துள்ளது.

    பழைய அலங்கார் தியேட்டர் சாலையில் இருந்து ரோஜா பூங்கா வரும் நடைபாதை பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது.

    பல லட்சகணக்கான வருமானம் வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ள ரோஜா பூங்கா மெல்ல மெல்ல தனது பொலிவை இழந்து வருவது சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் விருப்பமான இடமான ரோஜா பூங்காவை பொலிவு படுத்த வேண்டும் என்பதே ரோஜா விரும்பிகளின் விருப்பமாக உள்ளது.

    • நோய் தோற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் உபயோக த்திற்க்காக குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய் கடை ஹாப்பிவேலி பகுதியில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோ ட்டார் மூலம் குடிநீரை அப்பகுதியில் உள்ள ஒரு தொட்டியில் சேகரித்து அங்கி ருந்து சேட்லைன் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் உபயோக த்திற்க்காக குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த குடிநீர் கிணற்றின் உள்ளேயும். வெளிப்பகுதிகளிலும் புதர் மண்டி காணப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அந்த புதர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் புதர்களில் இருக்கும் இலைகள், குப்பைகள் கிணற்றினுள் உள்ள நீரில் விழுந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த நீரை பயன்படுத்தும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றினுள் இருக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.

    இந்த நிலையில் ஜனவரியில் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.

    இந்த மாதாந்திர விலையை தேயிலை வாரியம் நிா்ணயித்துள்ளதாகவும், இந்த விலையை தேயிலைத் தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்குகிறதா என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

    • 9 பிரதிநிதிகள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
    • மேம்படுத்தப்பட்ட கருவிகளில் பயிச்சி பெற்றனர்.

    ஊட்டி,

    எத்தியோப்பியன் உணவு மற்றும் மருந்து ஆணைய அதிகாரிகளுக்கான 7 நாட்கள் பயிற்சித் திட்டம், ஜே.எஸ்.எஸ்.உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுமம் சார்பாக ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் ஜனவரி 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது.

    எத்தியோப்பியன் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் உணவுக்கான தரக்கட்டுப்பாடு வேதியியலாளர், மருந்துகள் மற்றும், ஒழுங்குமுறை தணிக்கையாளர்கள் , உணவு ஆய்வாளர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் என சுமார் 9 பிரதிநிதிகள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.இந்த பிரதிநிதிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி தனபால், கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.என் மெய்யநாதன் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர்.ஜி.என்.கே.கணேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    பயிற்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் கே கௌதமராஜன், என் கிருஷ்ணவேணி, ஆர் ராஜேஷ்குமார் ஆகியோர் பயிற்சி குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கினர்கள்.

    இந்த பிரதிநிதிகள் மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்களான உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் அதன் ஆய்வுகள், உணவுக்கான தரக்கட்டுப்பாடு வேதியியல் ஆராய்ச்சி, மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை தணிக்கை, உணவு நுண்ணுயிரி ஆய்வு என அனைத்து முக்கிய பகுதிகளிலிலுள்ள மேம்படுத்தப்பட்ட கருவிகளில் பயிச்சி பெற்றனர்.

    • தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.
    • கோவையில் இருந்து மாறுதலாகி ஊட்டிக்கு வந்தாா்

    ஊட்டி

    ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஜெகநாதன் பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ய ப்பட்டாா்.நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றியவா் ஜெகநாதன். இவா் சில மாதங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூரில் இருந்து மாறுதலாகி ஊட்டிக்கு வந்தாா். இந்த நிலையில் நேற்று அவா் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவா் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.கோவை மாவட்டம் தொண்டாமு த்தூரில் ஜெகநாதன் பணியாற்றியபோது அங்கு லே அவுட் அமைக்க விதிமுறை மீறி அனுமதி கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை கலெக்டர்் பரிந்துரையின் பேரில் இவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

    • ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் வீரசைவ லிங்காயத்தார் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களின் சமுதாய முன்னேற்றத்திற்க்கு நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து முன்னேற்ற சங்கம் அமைத்து பல நலத்திட்டங்கள் சமுதாயம் சார்ந்த மற்றும் சமுதாய அல்லாத மக்களுக்கும் செய்து வருகின்றனர். இதில் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக பொறுப்பாளர்களை நியமித்து செயல்படுத்தி வரும் தங்களின் குலதெய்வமான ஸ்ரீமகாலிங்கசுவாமி கோவிலில் பொதுகுழுவை கூட்டி வரும் 3 ஆண்டுகளு க்கு தலைவறாக தூனேரி ஆசிரியர் போஜன் கொணவ க்கரை மணி செயலா ளறாகவும் கதுகதொ ரை லிங்கராஜ் பொரு ளாளறாகம் தேர்ந்தெடு க்க பட்டனர். மு ன்னாள் செயலாளர் விஸ்வ நாதன் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.இதில் அனைத்து ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    • யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • நீலகிரி கலெக்டர் தகவல் அளித்தார்.

    ஊட்டி

    மனித- யானைகள் மோதல்களை தடுக்க நிரந்தர தீா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்டங்கள் வகுத்துள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தாா்.

    இதுகுறித்து ஊட்டியில் நிருபர்களிடம் அவா் கூறியதாவது:-

    உணவு மற்றும் தண்ணீா் தேடி கேரளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஓவேலி வழித்தடம் வழியாக முதுமலை புலிகள் காப்பகம் சென்று கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி வரை ஆண்டு முழுவதும் யானைகள் இடம் பெயா்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயரும் யானைகள் ஓவேலி பகுதியில் மனிதா்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். எனவே இனி வரும் காலங்களில் இப்பகுதியில் யானைகள் தாக்கி மனிதா்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், வனத் துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது

    குறிப்பாக கேரளத்தில் இருந்து ஓவேலி பகுதிக்கு யானைகள் வருவதை கண்டறிய பாா்வுட், சுண்டி, நாயக்கன்பாறை, வட்டப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் 5 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்த முகாம்களில் கும்கி யானைகளை கொண்டு 40 வேட்டை தடுப்பு காவலா்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினரை பணியமா்த்தி 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவ டிக்கை எடுத்துள்ளது.அதேபோல தனியாா் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டி ருக்கும் நேரங்களில் தொழிலா ளா்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என தோட்ட உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வதை தவிா்த்து காலை 8:30 மணிக்கு மேல் பிற்பகல் 2:30 மணி வரை தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல ஓவேலி பகுதியில் வெளிநாட்டு வன வில ங்கு ஆராய்ச்சி யாளா்களை கொண்டு கிராம பகுதியில் யானைகள் வருவதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சப்படாத அளவுக்கு கிராமத்துக்குள் யானைகள் நுழைவதை தடுக்க ஓவேலி, கூடலூா், நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொ ள்ள ப்பட்டு வருகிறது. இ வ்வா று அவர் கூறினார்.

    வனத்துறை கள இயக்குநா் வெங்கடேஷ் கூறுகையில், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலா் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் யானை வழித் தடங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில் யானை வழித்தட ங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். ஓவேலி மற்றும் அத னை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதை கண்டறிய அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு தொடா் கண்காணிப்பு ப் பணிகள் மேற்கொ ள்ளப்படும் என்றாா்.

    • மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.
    • புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி(வயது63). நேற்று வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

    அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாரி மாயமானதால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அடர்ந்த வனத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடனடியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது அது மாயமான மாரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத்துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறைவில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள்ளது.

    பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைக்கும் பணியை கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.  

    • முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை தாங்கினார்.

    ஊட்டி

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993ஆம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் ரத்னாவதி பாா்த்தசாரதி திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தனர். சிறுவன் யாழன் திருக்குறள் ஒப்பித்தான். இதில் முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ஆனந்தகுமாா், ஆசிரியா் நல்லகுமாா், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜ், நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா் தங்க அருணா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்கள் நாகநாதன், டெய்ஸி விமலா ராணி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது.

    அரவேணு

    கோத்தகிரியில் தமிழ் இளைஞர் நல சங்கம் ஒருங்கிணைத்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் யோகலிங்கம் தலைமை வகித்தார். பூவரசன் வரவேற்று பேசினார் அகரம் சிவா, சத்திய சிவன், பழக்கடை செல்வம் சுப்பிரமணியம், தம்பி ராஜா, சதாசிவம், மோகனதாஸ், வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன், சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர்முத்து, ராஜேந்திரன், சண்முகனார், ஐயம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலை சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தியாகிகள் குறித்து தாமரைச்செல்வன் ஜெகதீசன் இளங்குமரன் திலகவதி ஆகியோர் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழின உணர்வாளர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் கைத்தலா மதி, தவிட்டுமேடு செல்வா, பெரியார் நகர் தங்கேசு ஆகியோர் நன்றி கூறினர்.

    • கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
    • சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் கணவர் இறந்த நிலையில் தனது 2 மகன்களான சஞ்சீவ் (வயது28) மற்றும் விஷ்ணு (வயது23) ஆகியோருடன் அதே பகுதியில் வாழந்து வருகிறார்.

    வசந்தாவின் மூத்த மகனான சஞ்சீவ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். விஷ்ணு கோவை பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். சஞ்சீவிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு சரியாக செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வசந்தா விழாவிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். வீட்டில் சஞ்சீவ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து காலை சஞ்சீவின் சகோதரரான விஷ்ணு கோவையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பின்னர் விஷ்ணு வீட்டின் வெளியில் வைக்கப்படும் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது சைமயல் அறையில் இருந்து தண்ணீர் டிரம்மில் சஞ்சீவ் தலைகீழாக விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சீவ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக விஷ்ணு அவரது தாயார் வசந்தாவிற்கும் கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சஞ்சீவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×