என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvalluvar"

    • முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை தாங்கினார்.

    ஊட்டி

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993ஆம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் ரத்னாவதி பாா்த்தசாரதி திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தனர். சிறுவன் யாழன் திருக்குறள் ஒப்பித்தான். இதில் முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ஆனந்தகுமாா், ஆசிரியா் நல்லகுமாா், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜ், நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா் தங்க அருணா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்கள் நாகநாதன், டெய்ஸி விமலா ராணி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம்.
    • எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்.பி., சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது.

    மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.
    • ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும்.

    சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.

    திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.

    என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள்.

    திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.

    ×