search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓவேலி, நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்க முடிவு
    X

    ஓவேலி, நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்க முடிவு

    • யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • நீலகிரி கலெக்டர் தகவல் அளித்தார்.

    ஊட்டி

    மனித- யானைகள் மோதல்களை தடுக்க நிரந்தர தீா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்டங்கள் வகுத்துள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தாா்.

    இதுகுறித்து ஊட்டியில் நிருபர்களிடம் அவா் கூறியதாவது:-

    உணவு மற்றும் தண்ணீா் தேடி கேரளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஓவேலி வழித்தடம் வழியாக முதுமலை புலிகள் காப்பகம் சென்று கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி வரை ஆண்டு முழுவதும் யானைகள் இடம் பெயா்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயரும் யானைகள் ஓவேலி பகுதியில் மனிதா்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். எனவே இனி வரும் காலங்களில் இப்பகுதியில் யானைகள் தாக்கி மனிதா்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், வனத் துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது

    குறிப்பாக கேரளத்தில் இருந்து ஓவேலி பகுதிக்கு யானைகள் வருவதை கண்டறிய பாா்வுட், சுண்டி, நாயக்கன்பாறை, வட்டப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் 5 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்த முகாம்களில் கும்கி யானைகளை கொண்டு 40 வேட்டை தடுப்பு காவலா்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினரை பணியமா்த்தி 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவ டிக்கை எடுத்துள்ளது.அதேபோல தனியாா் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டி ருக்கும் நேரங்களில் தொழிலா ளா்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என தோட்ட உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வதை தவிா்த்து காலை 8:30 மணிக்கு மேல் பிற்பகல் 2:30 மணி வரை தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல ஓவேலி பகுதியில் வெளிநாட்டு வன வில ங்கு ஆராய்ச்சி யாளா்களை கொண்டு கிராம பகுதியில் யானைகள் வருவதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சப்படாத அளவுக்கு கிராமத்துக்குள் யானைகள் நுழைவதை தடுக்க ஓவேலி, கூடலூா், நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொ ள்ள ப்பட்டு வருகிறது. இ வ்வா று அவர் கூறினார்.

    வனத்துறை கள இயக்குநா் வெங்கடேஷ் கூறுகையில், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலா் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் யானை வழித் தடங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில் யானை வழித்தட ங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். ஓவேலி மற்றும் அத னை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதை கண்டறிய அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு தொடா் கண்காணிப்பு ப் பணிகள் மேற்கொ ள்ளப்படும் என்றாா்.

    Next Story
    ×