நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.
நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
Published on

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைக்கும் பணியை கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com