என் மலர்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் பால ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி திருவிழா உற்சவம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபும் கிராமத்தில் பழமை வாய்ந்தபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 19-ந்தேதி பால் குடம் எடுப்பதற்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி யும் அங்கு உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து சென்று ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. அப்போது கோலாட்டம், வாணவே டிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க ஒன்றிய உறுப்பினர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி ஒன்றிய செயலாளர் தவமணி வரவேற்றார்.
மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட தலைவர் சுபாதேவி, மாவட்ட துணை செயலாளர் மாலா ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்மு றையை தடுத்து நிறுத்த வேண்டும், 100 நாள் வேலைக்கு ஆன்லைன் பதிவு செய்வதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் கஸ்தூரி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி புஷ்பலதா நன்றி கூறினார்.
திருப்பூண்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் 12-ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 27 மாவட்டங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருப்பூண்டி நண்பர்கள் அணியினர் 15,000 ரொக்கம், 2வது இடம் பெற்ற மீமிசல் அணியினருக்கு 12,000 ரொக்கம், 3ம் இடத்தை பிடித்த திருவண்ணாமலை அணியினருக்கு 10,000 ரொக்கம் மற்றும் 3 அணியினருக்கும் சுழற்கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டியை 100-க்கும் மேற்பட்ட பார்வையா ளர்கள் கண்டு ரசித்தனர்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது என செல்வராஜ் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99ம் ஆண்டு பிறந்தநாள் விழா திருக்குவளையில் விமர்சியாக கொண்டாட ப்படுகிறது. அதன் ஒருபகுதியாக திருக்குவளை இல்லத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு செல்வராசு எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில்; மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை தமிழக மக்கள் மட்டுமின்றி பொதுவாகவே கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிரானது.
புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படு த்தப்பட்டால், தொடர் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படும். மாணவர்கள் கல்வியை தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படும்.
தேசிய கல்வி கொள்கை யை தமிழக மக்கள் சரியாக படிக்கவில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழக மக்களின் நலனையும், உரிமைகளையும் மிக கண்ணியத்துடன் எடுத்து க்கூறிய தமிழக முதல்வரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கத்துக்குட்டி தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 14 ஆயிரத்து 164 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டதால்தான் 9 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
இதுபோன்று தமிழக மக்களுக்கு எதிரான கருத்து க்களை அண்ணாமலையும், பாஜகவினரும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
நாகை அருகே பனங்குடியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன், மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். சன்னமங்கலம் கிளை நிர்வாகி முத்து வரவேற்றார். இதில் சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்தார்.
இதில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.
திருமருகலில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம்திரு மருகல் கால்நடை மருத்துவ மனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக ஏழை விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் 5 வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கால்நடை த்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோர் தலைமை தாங்கிளர். திருமருகல் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமரன் வரவேற்றார். இதில் திருமரு கல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 100 பயனாளிகள் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்க ப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சிவகுமார், அருண், சிவப்பிரியா, பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயன், பவுஜியா பேகம் அபுசாலி, பாப்பாத்திகனி சாதிக் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரியில்நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்திர கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது
விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியநாதன். கோமதி. தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன். வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும்கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.27 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அனுமதி அளித்தார்.
முடிவில் ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிட்டுக்குருவிகள் கூண்டை கலெக்டர் அருண் தம்புராஜ் அமைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிட்டுக்குருவிகளுக்கான கூண்டினை பொருத்தி ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார். அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளையின் மற்ற செயல்பாடுகளையும் பொறுமையுடன் கேட்டு அறிந்து அதற்கான வாழ்த்துக்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக அதிகாரிகள் மற்றும் அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், கார்த்திக், ஜெகன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம், ஆயக்கரன்புலம், பன்னாள் தென்னடார் வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பறவையான மயில் வசித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மயிலை சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா காப்பாற்ற முயற்சி செய்தார்.
ஆனால் மயில் இறந்துவிட்டது. இது குறித்து கோடியக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தனர்.
கோடியக்கரை வனக்காவலர் ரனில்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்தனர்.
பின்பு வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் முன்னிலையில் இறந்த மயிலை வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா ஒப்படைத்தார்.
பின்பு வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
வாட்டாகுடியில் உள்ள மாரியம்மன்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாட்டாகுடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 30ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடை பெற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோவில் உள்ள மாரியம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சித் துணைத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைஞாயிறில் கூட்டுறவு பால் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சி யின் கூட்டம் நடைபெற்றது. தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குகன், துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலை ஞாயிறு பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திர ப்பதிவு செய்ய, சிட்டா அடங்கல் எடுக்க 8 கிலோமீட்டர் தொலை விலுள்ள திருப்பூண்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.தலைஞாயிறு பேரூரா ட்சியில் மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பால் கூட்டுறவு சொசைட்டி தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்ற முற்றிலும்பி ளாஸ்டி க்கை தவிர்ப்ப தற்காக கூட்டத்தில் உலோக த்திலான பாட்டில்களில் தண்ணீர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பேப்பர் கப்பிற்கு பதிலாக பீங்கான் கோப்பை பயன்படுத்தப்பட்டது. முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாதா குளத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் திருப்பலி மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டு பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்யநற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.






