என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே வாகனசோதனையில் 32 பெட்டிகளில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவில் பகுதியில் மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கார்வீன்ராஜ் ஜெகதீஸ்குமார் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைகாலில் இருந்து வந்த மினிலாரியை சோதனையிட்டதில் 32 பெட்டிகளில் 1500 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதைத் தொடர்ந்து மினிலாரியை ஒட்டிவந்த காரைகாலை சேர்ந்த மணிவண்னண். (28). ராஜ்குமார்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி அருகே குடும்ப தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

    தரங்கம்பாடி,ஏப்.2–

    தரங்கம்பாடி அருகே தாழம்பேட்டை மீனவர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30). மீனவர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர் 2–வது திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் பாஸ்கரின் தாய் செல்லமாவுக்கும், மருமகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அவரது தாயை தள்ளிவிட்டதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அறிந்த பாஸ்கரின் தம்பி ராஜா (28) அங்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ராஜா கட்டையால் பாஸ்கரை தலையில் தாக்கியுள்ளார்.

    படுகாயமடைந்த அவரை மீட்டு திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பாஸ்கருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இது குறித்து அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் முருகவேள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சீர்காழி அருகே மீனவர் ஒருவர் மர்மமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி, ஏப்.1–

    சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரகுமணி (வயது47). மீனவர்.

    இவர் கடந்த 30–ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் நேற்று இரவு தொடுவாய் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மைய பழைய கட்டிடத்தின் முதல் தளத்தில் ரகுமணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதைக்கண்ட கிராம மக்கள் இதுகுறித்து அவரது மனைவி கலையரசியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கூறினார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ரகுமணி கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம் அருகே ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாத வேதனையில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பார்வதி. இதில் கிருஷ்ணமூர்த்தி மாற்றுதிறனாளி. பார்வதி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்திகா (வயது 21).

    பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் கீர்த்திகா ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார். பிளஸ்-2 முடித்து விட்டு டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட கீர்த்திகாவுக்கு மருத்துவ படிப்பில் சேர போதிய பணம் இல்லை. இதனால் மகளின் லட்சிய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என கவலைபட்ட பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தனர்.

    அங்கு 2 ஆண்டுகள் படித்த கீர்த்திகா மேற்கொண்டு படிப்பை தொடர பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினார். தனது பெற்றோரிடம் எப்படியாவது டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என கூறிவந்தார்.

    இதனால் மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோரும் பல இடங்களில் பணம் கேட்டு பார்த்தனர். மேலும் வங்கியில் கடன் கேட்டும் கொடுக்கவில்லை.

    இதனால் தன்னால் டாக்டராகாமல் போய் விடுமோ என எண்ணி மனமுடைந்த மாணவி கீர்த்திகா வீட்டில் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    தனது மகள் படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என கீர்த்திகாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    நாகூரில் முஸ்லிம் ஜமாத் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகூரில் முஸ்லிம் ஜமாஅத் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் 29-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 18 வயது நிரம்பியவர்கள், விடுபட்டு போனவர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாஹா மாலிம், துணைத் தலைவர் ரம்ஜான் அலி, செயலாளர் அபுல் காசிம் சாஹிப், பொருளாளர் அப்துல் ஹமீது மரைக்காயர் துணைச் செயலாளர் கலில் ரஹ்மான், மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேளா ங்கண்ணி பேராலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகி றது.

    அதனையொட்டி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி தேர்பவனி மற்றும் நிவ்ய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. 

    இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் உருவ சிலைக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தங்ககிரீடம் சூடப்பட்டது. 

    இதையடுத்து தேர்பவனி, திவ்ய நற்கருணை, ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திட்டச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி முதல்நிலை பேரூராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பிளாஸ்டிக் இல்லா திட்டச்சேரி பேரூராட்சி விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர்கண்ணன் முன்னிலை வகித்தார். 

    மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவியா பாரிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை, விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இந்த பேரணி திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி திட்டச்சேரி கடைத்தெரு வழியாக கொந்தகை கடைத்தெரு வரை நடைபெற்று மீண்டும் திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது சுல்தான். 

    வரித்தண்டலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நாகூர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது ெசய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம், நாகூர் காவல் சரகம், கடம்பங்குடி கிராமம், அக்ரகாரத் தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் சிங்காரு (எ) சிங்காரவேல் (வயது53).

    சின்னப்பாவுக்கு 4 பெண் குழந்தைகள். முதல் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3வது மகள் ஐஸ்வர்யா கடந்து ஒரு வருடம் முன்பு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாகவும், அதற்கு தன் மனைவி முத்துலெட்சுமி (48) தான் காரணம் என கூறி சிங்காரவேல்குடி போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சிங்காரவேல் குடிபோதையில், வீட்டு அருகே வழக்கம் போல் முத்துலெட்சுமியிடம் தகராறு செய்தபோது ஆத்திரமடைந்து மூங்கில் கம்பால் தலையில் அடித்துள்ளார், இதை பார்த்த, முத்துலெட்சுமியின் மூத்த மகள் ஹேமலதா (26) தடுத்துள்ளார். 

    ஆனால் சிங்காரவேல் தனது மகள் ஹேமலதாவை கீழே தள்ளிவிட்டு விட்டு, முத்துலெட்சுமியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.சம்பவம் குறித்து அறிந்த நாகூர் வட்ட ஆய்வாளர் சிவராமன் முத்துலெட்சுமியின் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.

    திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் சரகம் சோழங்கநல்லூரில் பதுங்கியிருந்த மேற்படி சிங்காரு (எ) சிங்காரவேலை நாகூர் போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே வயலில் அறுவடை செய்து வைத்திருந்த எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலத்தை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்து இருந்தார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எள்செடிகளை அறுவடை செய்து வயலில்பட்டறையாக வைத்து மூடி வைத்திருந்தார் சம்பவத்தன்று எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர்.

    இதில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள எள் மற்றும் எள் செடிகள் முற்றிலும் எரிந்து சேதமானதுஇதுகுறித்து மனோகரன்வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    நாகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 1972 ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 அன்றுமக்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

    2022 சுற்றுச்சூழல் தினத்தை ஸ்வீடன் நாடு முன்னின்று நடத்துகிறது. ஐநா சபை 2022 ஆம் ஆண்டின் “ ஒரே ஒரு பூமி “ என்ற முழக்க வாசகத்தை அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் குறிக்கோள் வாசகமாக “ இயற்கையோடு இணைந்து நிலைத்து வாழ்வோம் “ என்ற சொற்றொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபை நீர் மாசு நில மாசு காற்று மாசு இவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. ஓசோன் பாதிப்பை நாம் சரி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க வேண்டும். நீர்வள மேலாண்மை நில மேலாண்மை இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மழைநீரைச் சேகரித்து இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். வாகன புகை மாசு குறைக்க இயன்றவரை பயன்படுத்துவோம். திறந்த வெளி மல கழிப்பிடங்களை இல்லாமல் செய்வோம். வருங்கால சந்ததியினர் வாழத் தகுதியான பூமியை உண்டாக்குவோம். அதிக அளவு மரங்களை நட்டு இயற்கையான பூமியை மீட்டெடுப்போம். 

    பிளாஸ்டிக் தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துவோம். பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்போம். தொற்று வருவதை தவிர்ப்போம். சூழல் மேம்பாட்டிற்காக அரசு செய்யும் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்போம். பசுமை பூமியை மீட்டெடுப்போம். என மாவட்ட பசுமை குழு உறுப்பினர் தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் நாகை முத்தமிழ் ஆனந்தன் தெரிவித்தார்.

    திருக்குவளை புனித இருதய ஆண்டவர் ஆலயத்தில் ேதர் பவனி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த களத்திடல்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த திருஇருதயஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெரு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய திருத்தேர் பவனி நடை பெற்றது. இதனை முன்னி ட்டு, மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர த்தில் இருதயஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலியை செய்துவைத்து சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். 

    ஆலய வளாகத்தி லிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவோடு நாங்கள் எங்கள் மருமகளை பார்க்கிறோம் என கண்ணீர் மல்க கோவிந்தராஜ் - பத்மாவதி கூறினர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தம்பதியினரின் மகன் சபரிகிருஷ்ணன் (வயது26). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா - மோகன் ஆகியோரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 20.8.21 அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 10 நாட்களே இருக்கும் நிலையில், கடந்த 2021 ஜூலை 7-ந்தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் ரேவதி, காதலனின் மரணத்தை தாங்க முடியாமல் மிக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். பின்னர் மனதை தேற்றிக்கொண்ட ரேவதி மகனை இழந்து வாடும் தனது காதலனின் வயதான தாய், தந்தையின் நிலைமையை நினைத்து வேதனையடைந்தார்.

    இதையடுத்து அவர்களோடு சேர்ந்து வாழ முடிவெடுத்த அவர் தனது வயதான மாமியார், மாமனாருக்கு பணிவிடைகள் செய்து அவர்களை பாதுகாக்கும் முடிவோடு காதலனின் வீட்டிற்கு சென்றார். திருமணமே ஆகவில்லை. ஆனால் மருமகளாகவே நினைத்து வீட்டிற்கு வந்து தங்கி வயதான தங்களுக்கு தனது பெற்றோர் போல் நினைத்து பணிவிடைகள் செய்யப்போகிறேன் என்ற ரேவதியை பார்த்து சபரி கிருஷ்ணனின் பெற்றோர் கைகூப்பி கண் கலங்கினர்.

    இதையடுத்து கடந்த 11 மாதங்களாக தனது காதலன் நினைவுகளை மட்டும் சுமந்து மாமனார், மாமியாருக்கு அனைத்து பணிவிடைகளையும் ரேவதி செய்து வருகிறார்.

    மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவோடு நாங்கள் எங்கள் மருமகளை பார்க்கிறோம் என கண்ணீர் மல்க கோவிந்தராஜ் - பத்மாவதி கூறினர்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சபரி கிருஷ்ணனின் தந்தை கோவிந்தராஜ், கூலி வேலைக்கு செல்லும் அவருடைய சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரி கிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்.

    தற்போது கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், சபரி கிருஷ்ணன் இறப்பிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறிய மின்வாரிய அலுவலர்கள் 8 மாதங்களாகியும் கண்டுகொள்ளவில்லை என்று சபரி கிருஷ்ணனின் சகோதரர் வேதனை தெரிவித்தார்.

    ×