search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    உலக சுற்றுச்சூழல் தின விழா

    நாகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 1972 ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 அன்றுமக்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

    2022 சுற்றுச்சூழல் தினத்தை ஸ்வீடன் நாடு முன்னின்று நடத்துகிறது. ஐநா சபை 2022 ஆம் ஆண்டின் “ ஒரே ஒரு பூமி “ என்ற முழக்க வாசகத்தை அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் குறிக்கோள் வாசகமாக “ இயற்கையோடு இணைந்து நிலைத்து வாழ்வோம் “ என்ற சொற்றொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபை நீர் மாசு நில மாசு காற்று மாசு இவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. ஓசோன் பாதிப்பை நாம் சரி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க வேண்டும். நீர்வள மேலாண்மை நில மேலாண்மை இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மழைநீரைச் சேகரித்து இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். வாகன புகை மாசு குறைக்க இயன்றவரை பயன்படுத்துவோம். திறந்த வெளி மல கழிப்பிடங்களை இல்லாமல் செய்வோம். வருங்கால சந்ததியினர் வாழத் தகுதியான பூமியை உண்டாக்குவோம். அதிக அளவு மரங்களை நட்டு இயற்கையான பூமியை மீட்டெடுப்போம். 

    பிளாஸ்டிக் தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துவோம். பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்போம். தொற்று வருவதை தவிர்ப்போம். சூழல் மேம்பாட்டிற்காக அரசு செய்யும் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்போம். பசுமை பூமியை மீட்டெடுப்போம். என மாவட்ட பசுமை குழு உறுப்பினர் தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் நாகை முத்தமிழ் ஆனந்தன் தெரிவித்தார்.

    Next Story
    ×