என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரங்கம்பாடி அருகே குடும்ப தகராறில் அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
    X

    தரங்கம்பாடி அருகே குடும்ப தகராறில் அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

    தரங்கம்பாடி அருகே குடும்ப தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

    தரங்கம்பாடி,ஏப்.2–

    தரங்கம்பாடி அருகே தாழம்பேட்டை மீனவர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30). மீனவர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர் 2–வது திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் பாஸ்கரின் தாய் செல்லமாவுக்கும், மருமகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அவரது தாயை தள்ளிவிட்டதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அறிந்த பாஸ்கரின் தம்பி ராஜா (28) அங்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ராஜா கட்டையால் பாஸ்கரை தலையில் தாக்கியுள்ளார்.

    படுகாயமடைந்த அவரை மீட்டு திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பாஸ்கருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இது குறித்து அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் முருகவேள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×