என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    X
    மாரியம்மன்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்

    வாட்டாகுடியில் உள்ள மாரியம்மன்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாட்டாகுடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த 30ம் தேதி  யாகசாலை பூஜைகள் தொடங்கி நடை பெற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று  புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து  மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    பின்னர் கோவில் உள்ள மாரியம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சித் துணைத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×