என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தோப்புத்துறை பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள 
    வேதநாராயண பெருமாள் என்றழைக்கப்படும் அபிஷ்ட 
    வரதராஜர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை 
    முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இரவு பத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
    இரவு பத்து நிகழ்ச்சியில் முக்கிய திருவிழாவான 
    கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. 

    சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள்ளேயே மேளதாளத்துடன் பெருமாள் புறப்பாடு நடைபெற்று கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று. 

    இதில் உபயதாரர்கள் உள்பட குறைந்த அளவு பக்தர்களே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பெருமாளை வழிபட்டனர்.
    நாகூர் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில், ராகு-கேது தோஷம் நீக்கும் ஆயிரமாண்டு 
    பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற நாகநாதசாமி கோவில் உள்ளது. 

    இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிவுற்றதையடுத்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் ஆலயத்தை சுற்றி 
    எடுத்துவரப்பட்டன. 

    அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 
    நாகநாதர், நாகவல்லி, ராகு கேது, துர்க்கை அம்மன் ஆகிய கோவில்களில் உள்ள விமானங்களுக்கும் கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வேதாரண்யத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், சுப்பையன், நகரச் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட கவுன்சிலர் தீபன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி-நாகை பாதையில் ரெயில் வேகம் அதிகரிக்க பராமரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆலயத்துக்கு 
    வந்து மாதாவை தரிசித்து செல்வர்.

    வெளியூர் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நாகை&வேளாங்கண்ணி ரெயில் பாதை அமைக்கப்பட்டு சில ரெயில்கள் வந்து சென்றது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பாதை மின் பாதையாக அமைக்கப்பட்டது. 

    இந்த நிலையில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தென்னக ரெயில்வே துறையினர் ஒரு வார காலமாக பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    குறிப்பாக ராட்சத எந்திரங்கள், ராட்சத ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டும் பாக்ஸிங், லிப்டிங், பார்மிசிங் மற்றும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணிகளை அடுத்த வாரத்தில் தென்னக ரெயில்வே துறை 
    அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    நாகையில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதனடிப்படையில் நாகை நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய நாகையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், கருப்புசிவா, ரெட்டு பிரகாஷ், பச்சை சிவா, அப்பு என்கிற பார்த்திபன், சீனு ஆகிய 6 பேரும் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 

    இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வேதாரண்யத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்: 

    வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாரத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. வட்டாரச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். 

    மாவட்ட பேரவை உறுப்பினர் மணிவண்ணன், வட்டார துணைத் தலைவர் ராஜரெத்தினம், வில்லவன் கோகோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியா¢களுக்கு இணையான ஊதியத்தை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்டச் செயலாளர் சித்ரா காந்தி, பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில்  ஏற்பட்ட சுனாமியால் ஏராளமான உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் கடற்கரையை ஒட்டி இருந்த பலரும் 
    வீட்டினை பறிகொடுத்து தவித்தனர்.

    இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பிலும் பல்வேறு தன்னார்வ அமைப்பு சார்பிலும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    அதன்படி வேளாங்கண்ணி ஏஞ்சல் நகர் பகுதியில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள்  உள்ளன. 
    இந்த நிலையில் சில வீடுகள் சேதம் அடைந்து  வீட்டின் மேற்கூரை 
    காரை  இடிந்து விழுந்துள்ளது.

    மேலும் பல வீடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அச்சத்துடன் குடியிருப்புவாசிகள் வசிக்கும்  சூழலில் உள்ளனர். 

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள சுனாமி குடியிருப்புகளை 
    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, 
    புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என வேளாங்கண்ணி 
    ஏஞ்சல் நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). நல்லத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராம் (31). 

    இவர்கள் இருவரும் சோமநாதர்கோவில் அருகேயுள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே 
    திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதில் மோகன்ராம் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரவி நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு 
    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து 
    மோகன்ராமை கைது செய்தார்.
    தஞ்சையில் சுபநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை கே.ஆர். பிரிண்டர்ஸ்&கார்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
    வேளாங்கண்ணியில் காதலியை பிரித்து சென்றதால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 26). இவரும்  அதே பகுதியை சேர்ந்த சிவநந்தினி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனை அறிந்த சிவநந்தினியின் பெற்றோர் மகளை கண்டித்தனர். 
    இதனால் அரவிந்த்குமார் சிவநந்தினியை அழைத்து கொண்டு வெளியூர் சென்றார். அங்கு கோவிலில் ரகசியமாக தாலி கட்டினார்.

    இந்த நிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து அரவிந்த்குமார், சிவநந்தினி ஆகியோர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    தகவல் அறிந்த இருவரின் பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 

    அப்போது அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய சகோதரர்கள் மற்றும் உறவினர் மிரட்டி தாலியை கழற்றி போலீஸ் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது. 

    மேலும் அரவிந்த்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிவநந்தினியை 
    மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் காதல் மனைவியை பிரித்து சென்றதால் மனமுடைந்த அரவிந்த்குமார் தனது வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் அரவிந்த்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 
    விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர் அருகே இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகூர் அருகே மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

    இந்த பணிக்காக அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன. 

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் 119 கிலோ இரும்பு கம்பிகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிய மேலநாகூர் பகுதியை சேர்ந்த மாறன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் தலைமறைவாக உள்ள 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    கட்டாய மதமாற்றத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினருடன் 
    போராடிய பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் நிர்வாகிகள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். 

    இதனை கண்டித்து வேதாரண்யம் நகர பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். 
    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×