என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.
நாகூர் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகம்
நாகூர் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரில், ராகு-கேது தோஷம் நீக்கும் ஆயிரமாண்டு
பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற நாகநாதசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிவுற்றதையடுத்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் ஆலயத்தை சுற்றி
எடுத்துவரப்பட்டன.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க
நாகநாதர், நாகவல்லி, ராகு கேது, துர்க்கை அம்மன் ஆகிய கோவில்களில் உள்ள விமானங்களுக்கும் கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






