என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலிகை பூங்கா திறப்பு
ஆயுதப்படை வளாகத்தில் மூலிகை பூங்கா
நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மூலிகை பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம், காடம்பாடியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 61 வகை மூலிகைகள் கொண்ட மூலிகை பூங்காவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் திறந்து வைத்து பேசும்போது:
தற்போது உள்ள சூழ்நிலையில் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். காவலர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு காற்று மாசுபடுவதை தடுக்க நம்மால் முடிந்த அளவு நாம் அனைவரும் உதவிட வேண்டும்.
தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, போக்சோ வழக்குகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள்.181, 1098, ஆகியவை ஆகும் என்றார். முன்னதாக ஆயுதப்படையில் ஆண், பெண் காவலர்களுக்கு ஓய்வு அறை திறந்து வைத்தார்.
Next Story






