என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரெயில்வே ரோட்டில் உள்ள நகைக்கடை அதிபர் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கினர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் நகைக்கடை அதிபர் தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நகைக்கடை அதிபர் தன்ராஜ், மருமகள் நிகில் படுகாயமடைந்தனர்.
நகைக்கடை அதிபர் குடும்பத்தில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

23 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கடைவீதியில் வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் 23 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ் தலைமை தாங்கினார். இயற்கை விவசாய ஆர்வலர்கள் ராஜசேகரன், காத்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம், நீர், பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் இரணியன் மற்றும் விஷ்ணுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 23 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை எந்தவித பிடித்தம் இல்லாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லின் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எ ன்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில், செயற்குழு உறுப்பினர் சிவசங்கர் நன்றி கூறினார்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பு பெறக்கோரி மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன்.நக்கீரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் உறுப்பினர் சேரன் செங்குட்டுவன், அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து இரண்டு மாத காலமாக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். பாதுகாப்புத்துறை, ெரயில்வே உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேட் மயமாக்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுகளையும் அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஐ.என்.டி.யூ.சி. ராமச்சந்திரன், கட்டுமான தொழிலாளர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன், சி.ஐ.டி.யூ. ரவி, ஏ.ஐ.டி.யூ..சி. ராமன், சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் மோட்டார் வாகன ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் மதுக்கடை ஒன்று உள்ளது. அந்தகடையின் மேற்பார்வையாளராக நாகராஜ் என்பவர் உள்ளார். அவர், நேற்று மதுக்கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.850 மதிப்பிலான 3 மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், ஜீவானந்தம், ராஜேந்திரன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் என்பன உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகள் மீதான நெருக்கடிகளை அரசு கைவிட வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலை பதவி உயர்வு அறிக்கையின் பதிவை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சங்க முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் கலா, முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணி ரெயிலடி காவிரி நகரில் இருந்து தொடங்கியது.
இதில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டு கொடியசைத்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி பூக்கடை தெரு, கூறைநாடு வழியாக பஸ் நிலையம் வரை சென்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியில் போக்குவரத்து போலீசார், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக காவிரி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களின் முன்பக்க கண்ணாடி ஓரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை மாவட்ட கலெக்டர் ஒட்டினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, வட்டார போக்குவரத்து முதல் நிலை இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் காவல் துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர், அரசு போக்குவரத்து கழகத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். காட்டுசேரி வீட்டில் இருந்து வரும் இவருடைய மனைவி மணிமேகலை (வயது 34), தனது குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டினுள் பீரோவை உடைக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு மர்மநபர் வீட்டின் பின்புற கதவை திறந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வீட்டின் பின்புற வாசல் வழியாக வீட்டிற்குள் சென்று மணிமேகலை பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு ெ்சய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மணல்மேடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே மேலாநல்லூர் கிராமத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் முற்றிலுமாக வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
மேலும் மேலாநல்லூர் வடிகால் வாய்க்காலை தூர்வாராததால் மழை நீர் வடிய வழியின்றி அனைத்து பயிர்களும் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.
இதுதொடர்பாக மேலாநல்லூர் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் யாரும் சென்று பார்வையிடவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்ணில் கரும்பு துணி கட்டி வயலில் இறங்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் பயிர் சேதத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கொள்ளிடம் அருகே பழையபாளையம், கொடக்கார மூலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் பகுதிக்கு 75 சதவீத பாதிப்படைந்ததாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால் பழையபாளையம் ஊராட்சி பகுதியில் ஏக்கருக்கு ரூ.1,000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பாதி பேருக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்காமல் ஏக்கருக்கு ரூ.1000 மட்டும் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர் என்று உதவி கலெக்டர் மகாராணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மகாராணி வெளியிட்டார்.
அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளான அ.தி.மு.க. நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், பா.ஜ.க. நகர தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 841 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 15 பேர் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 22 வாக்காளர்கள் உள்ளனர்.
சீர்காழி (தனி) தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 899 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல பூம்புகார் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 862 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 582 வாக்காளர்கள் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையில் தரம் குறைந்த பழுப்பு நிற அரிசி வழங்கியதால் பொதுமக்கள் செம்பதனிருப்பு கடைத் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருகே மேல்நாங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் நேற்று காலை பொதுமக்கள் அரிசி வாங்க வந்தனர். அப்போது அவர்களுக்கு விற்பனையாளர் தரம் குறைந்த மற்றும் பழுப்பு நிறமாக காணப்பட்ட அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பதனிருப்பு கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சீர்காழி தாசில்தார் ஹரிதரன், வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், கிராம முக்கியஸ்தர் முத்து ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகரில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் ஊராட்சி கழுக்காணி முட்டம் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2 மாதங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள பெரியகுளத்தில் நீர்நிரம்பி சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது.
ஸ்ரீநகரில் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. தெருவிளக்கு வசதியும் இல்லை. தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழைநீர் சேகரிக்கப்பட்டு பெரியகுளம் நிரம்பி வழிந்து ஸ்ரீநகர் முழுவதும் தேங்கியது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்காக வீட்டின் வாசலில் தேங்கியுள்ள சேறும் சகதியுமாக உள்ள மழை நீரில் தான் சென்று வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக மழை நீர் தேங்கி இருப்பதால் நீரின் மேல் பாசிகள் படர்ந்து காணப்படுகின்றன. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் ஸ்ரீநகரில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 2½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பர்மா காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 41). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பூம்புகாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். மறுநாள் வீடு திரும்பிய நடராஜன் கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 1½ பவுன் சங்கிலி, மற்றொரு 1 பவுன் சங்கிலி மொத்தம் 2½ பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் என்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடராஜன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.