என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேர் கொலை
    X
    நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேர் கொலை

    நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேர் கொலை- 16 கிலோ தங்கம் கொள்ளை

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரெயில்வே ரோட்டில் உள்ள நகைக்கடை அதிபர் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்  அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கினர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் நகைக்கடை அதிபர் தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  நகைக்கடை அதிபர் தன்ராஜ், மருமகள் நிகில் படுகாயமடைந்தனர்.

    நகைக்கடை அதிபர் குடும்பத்தில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×