search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி
    X
    மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி

    புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்

    புதிய வேளாண் சட்டங்களை திரும்பு பெறக்கோரி மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன்.நக்கீரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் உறுப்பினர் சேரன் செங்குட்டுவன், அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து இரண்டு மாத காலமாக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். பாதுகாப்புத்துறை, ெரயில்வே உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேட் மயமாக்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுகளையும் அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஐ.என்.டி.யூ.சி. ராமச்சந்திரன், கட்டுமான தொழிலாளர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன், சி.ஐ.டி.யூ. ரவி, ஏ.ஐ.டி.யூ..சி. ராமன், சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் மோட்டார் வாகன ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×