என் மலர்
கிருஷ்ணகிரி
கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் ரத்தினகிரி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தடிக்கல் அருகே உள்ள முத்துராயன் கொட்டாய் பகுதியை சேர்ந்த எல்லப்பன் (வயது 19), அனுசோனை ராமராஜ்(21), பேவநத்தம் ராமன் (29), லகுமேஷ் (22), பாலகுறியைச் சேர்ந்த அருண்குமார் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கீழ்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ஜெயம்மா(வயது 73). இவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்சோமார்பேட்டை கூட்ரோடு அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் இபிரிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). தொழிலாளி. இவர் ஓசூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சீதாராம்மேட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மோகன்ராஜ் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகராஜகடை அருகே கிணற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 34). இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் குடும்பத்தினர் சாமி கும்பிட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் குளித்துவிட்டு வருவதாக மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வினோத், அங்குள்ள ஒரு கிணற்றிற்கு சென்றார். நீச்சல் தெரியாததால், படிக்கட்டில் நின்று குளித்தார். அப்போது தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். குளிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோத் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் வினோத்தின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீரில் மூழ்கி இறந்த வினோத்திற்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அவருடைய உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ராயக்கோட்டை பகுதியில் கொரோனா அதிகரித்து வருவதால் 10 நாட்கள் கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எச்சம்பட்டி, உடையாண்டஅள்ளி, கொப்பக்கரை, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மெயின் ரோடு, ரகமத் காலனி, மஜித் தெரு, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
எச்சம்பட்டி, உடையாண்டஅள்ளி, கோட்டை ஆகிய பகுதியை சேர்ந்த, 5 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், 3 பேர் மர்மமான முறையில் இறந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத்தவிர ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சூளகிரி மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக ராயக்கோட்டை தக்காளி மண்டி மற்றும் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ராயக்கோட்டை பகுதியில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு வருகிற 1-ந் தேதி முதல் 10-ந்தேதி வரையில் ராயக்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் முழுமையாக மூட ராயக்கோட்டை அனைத்து வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மருந்து, பால் கடைகளை தவிர மற்ற கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
குருபரப்பள்ளி அருகே விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் இரவு ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஸ்ரீதர் சாலையில் விழுந்தார்.
அப்போது அந்த வழியே பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ஸ்ரீதர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள கர்னூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகலூர் அருகே உள்ள முத்தாலியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொங்கு செட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). கார் டிரைவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த அவர் காடுமுச்சந்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி நந்து (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2-வது குழந்தை பிறந்தது முதல் உடல் நலக்குறைவால் நந்து அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காாணப்பட்ட நந்து ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நந்து இறந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாரூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி வசந்தி (32). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு முனியப்பன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது வசந்தி வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வசந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சூளகிரி அருகே விபத்தில் வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டி.கே.புரம் புதுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). வேன் டிரைவர். சம்பவத்தன்று சூளகிரி அருகே உள்ள குருபராத்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கொரோனாவின் பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து எம்எல்ஏ சிவி ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவின் பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து எம்எல்ஏ சிவி ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சி.வி.ராஜேந்திரன். இவரது சொந்த ஊர் பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி ஆகும். கட்சிக் கூட்டங்களிலும், பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் வந்தது.
இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் தாலுகா மத்திகிரி அன்னை நகரை சேர்ந்தவர் தனுஷ்ராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் விஷம் குடித்து தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி நிரோஷா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ்ராஜ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஞ்செட்டி அருகே பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்ராம்பாளையம் அருகே உள்ளது பஞ்சல் துணை கிராமம். இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்த நபர்கள் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். நிர்வாண நிலையில் உடல் கிடந்தது. அதே போல அந்த பெண் அணிந்திருந்த காலணியும், அதன் அருகே பேப்பர்கள் சில தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? என தெரியவில்லை. அவர் தேன்கனிக்கோட்டை, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவராகவோ, அல்லது கர்நாடக மாநில எல்லைப்பகுதியை சேர்ந்தவராகவோ இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கர்நாடக மாநில பகுதியில் கொலை செய்து பெண்ணின் உடலை அஞ்செட்டி அருகே போட்டு விட்டு, உடலை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் இந்த பகுதியில் எந்த பெண்ணும் காணாமல் போய் இருக்கிறார்களா? வழக்கு எதுவும் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அஞ்செட்டி அருகே பெண்ணை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






