என் மலர்
கிருஷ்ணகிரி
சாமல்பட்டியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டுதீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). இவருக்கும், ராயக்கோட்டையை சேர்ந்த முருகன் மகள் பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே கணவர் கார்த்திக், இவரது தாயார் மாதேஸ்வரி (48) ஆகிய 2 பேரும் பிரியங்காவிடம், பெற்றோர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி சாமல்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கார்த்திக், மாதேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், கார்த்திக், அவருடைய தாயார் மாதேஸ்வரி ஆகியோருக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமையால் மரணம் அடைய செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கார்த்திக், அவரது தாயார் மாதேஸ்வரி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

போச்சம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருலோகசுந்தர் (வயது 27). திருமணம் ஆகாத இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றதாக கொல்லகொட்டாய் மாரியப்பன் (வயது 35), குப்பச்சிபாறை வைகுண்டன் (48), யானைக்கால்தொட்டி சுப்பிரமணி (45), கர்னூர் சின்னராய ரெட்டி (70), தளி அருகே உள்ள முத்தூர் ரவி (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.680 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்டி கடைகளில் குட்கா விற்கப்படுகிறதா? என போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்ற மத்திகிரி மஞ்சுநாத் (வயது 19), பென்னிகல் ராஜகோபால் (39), ஒட்டர்பாளையம் வெங்கடசாமி (42) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 68). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணப்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டத்தில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கொரல்நத்தம் நாகராஜ் (வயது53), யானைக்கால்தொட்டி அண்ணாமலை (61), பிள்ளையார் கோவிலூர் கார்த்திகேயன் (40), உளிவீரனஅள்ளி சிவக்குமார் ராய் (23), ஓசூர் என்.ஜி.ஓ. காலனி ஆனந்த் தேவ்நாத் (40), தபால்மேடு கோவிந்தராஜ் (55), பாறையூர் பழனி (42) அகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூளகிரி அருகே ஆம்னி பஸ் செல்ல வழி விடாததால் ஆத்திரம் அடைந்து டிரைவரை தாக்கி லாரி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
சென்னை வண்ணாரப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் அவர் லாரியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சுக்கு லாரி டிரைவர் சண்முகம் சிறிது தூரம் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆம்னி பஸ்சின் டிரைவர் பஸ்சை லாரியின் குறுக்கே நிறுத்தினார்.
பின்னர் ஆம்னி பஸ்சின் டிரைவர், கிளீனர் ஆகியோர் கீழே இறங்கி, லாரி டிரைவரை தாக்கி லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி மற்றும் முன்புற கண்ணாடி ஆகியவற்றின் மீது பெரிய கற்களை தூக்கி போட்டனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ வைரலானது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்த ஆம்னி பஸ் டிரைவரான, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிக்கேகவுடா (வயது 24), கிளீனர் பிரசாத் (25) ஆகியோரை கைது செய்தனர்.

ஓசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேகேப்பள்ளி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 42). உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.37 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து அமீர்கான் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜி ராவ் (47). தனியார் நிறுவன காவலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வாணியம்பாடியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, பணம் திருட்டு போனது தெரிந்தது.
இதுகுறித்து நாகராஜி ராவ் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூர் பகுதியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகையிலை பொருட்கள் விற்ற 19 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது புகையிலை பொருட்களை விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 775 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 500 ஆகும்.
அரசு, தனியார் அலுவலகங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிபுரியும்பெண்கள் பாலியல் தொந்தரவு இருந்தால் அதற்கான குழுவில் புகார் செய்யலாம் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க, அனைத்து துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
பணிபுரியும் இடத்தில் ஆண்கள், பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உடலை தொடுதல், ஆபாசம் கலந்த பேச்சு, இரட்டை அர்த்தத்தில் சைகை காட்டுவது, ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது உள்ளிட்டவை பாலியல் ரீதியான துன்புறுத்தலை காட்டுவது ஆகும்.
பாலியல் தொல்லைகளுக்கு அடிப்படை காரணமே ஆண்கள் சமுதாயத்தில் மேம்பட்டவர்களாகவும் அனைத்து முடிவுகளும் அவர்களே எடுப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். பொதுவாக சமுதாயத்தில் ஆண்களின் கட்டுப்பாட்டிலும் அவர்களுக்கு அடங்கி வாழவும் எல்லாவற்றிற்கும் பெண்கள் ஆண்களை நம்பியே வாழ்வதும் இயல்பாகிறது. இதன் தாக்கம் பணிபுரியும் இடத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் நிகழ்கிறது. சமுதாயத்தில் ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் பணிபுரியுமிடத்தில் மேலதிகாரியாகவும், சகஜமாக பழகும் பணியாளர்களாகவும் ஆண்களுக்கு சமமாக திகழ்வதும் ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையிலேயே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகிறது.
அரசு, தனியார் அலுவலகங்களில் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள் அந்தந்த பணியிடங்களில் பாலியல் பிரச்சினைகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் புகார் செய்யலாம். அப்படி செய்யப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கல்லாவி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி அருகே மேட்டு சூளகரையை சேர்ந்த தொழிலாளி மதியழகன் (வயது 50). இவர் மொபட்டில் ஓலப்பட்டியில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில் மேட்டுசூளகரையில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதியழகன் பலியானார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போச்சம்பள்ளியில் சாலையை சீரமைத்து தரக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி புகைப்படக்காரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
போச்சம்பள்ளியை அடுத்த சின்னபாரண்டபள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
தற்போது அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் சின்னபாரண்டபள்ளியை சேர்ந்த புகைப்படக்காரரான பட்டாபிராமன் (வயது 42) என்பவர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாபிராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இறங்கி வந்தார்.